பெண்களே! சிந்தியுங்கள்!
(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள்,
இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை, அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள், மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள்,பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்…. (புகாரி)