சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் மெட்ரோ மனாரில் வைத்து மாலை 5.00 மணி அளவில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாநில நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கத்தின் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர். இஃப்தார் நிகழ்ச்சி மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளைப்பற்றிய கலந்தாலாய்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.