அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு Cricket Scores SL V AusEng V Ind 5th ODI , R Premadasa Stadium, Colombo Sri Lanka won by 4 wickets Live Scorecard
டெல்லி : டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.
நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Source: