சென்னை: மத்தியிலும் மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று 5 மண்டலங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருக்கிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரி, சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜிம் மற்றும் செயலாளர் ஷாஹித் ஆகியோர் கலந்து கொண்டனர். திரளான பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டு மாநில தலைவரிடம் பேட்டி கண்டனர்.
NOV 2013
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
எண்ணெயை ஏற்றுமதி செய்யாமலும் ஈரானால் முன்னேற முடியும் – நஜாத்!
டெஹ்ரான்:கச்சா எண்ணெய் ஏற்றுமதி இல்லாவிட்டாலும் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற இயலும் என்று அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் தடையை கண்டித்து கிரீஸ் நாட்டிற்கு எண்ணெய் ஏற்றுமதிச்செய்வதை செவ்வாய்க்கிழமை ஈரான் நிறுத்தியது. பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவிட்டு தடைக்கு பதில் தடையை விதிப்போம் என்று கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்
மங்களூர்: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பிரதிநிதிகளின் கூட்டம் மங்களூர் டவுண்ஹாலில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய ஆலோசனைக்குழு தலைவர் அனீஸ் அஹமது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாணவர்கள் மத்தியில் அரசியல் சக்தியை உருவாக்கும் இயக்கங்கள் மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஹைதரபாத் கலவரத்தை தூண்டியது தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சு!
ஹைதராபாத்:ஹைதராபாத் பழைய நகரத்தில் வகுப்புக்கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் உரைதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கு பிறகு வி.ஹெச்.பி தலைவர் கோவிந்த்சிங், குர்மாங்குடாவில் பா.ஜ.க கவுன்சிலர் ஸஹதேவ் யாதவ் ஆகியோரின் தலைமையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் என்று ஹைதராபாத்தில் மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் கண்காணிப்பு கமிட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளது.
உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிட இஃவானுல் முஸ்லிமீன் எதிர்ப்பு!
கெய்ரோ : பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் உளவுத்துறை தலைவரும், முன்னாள் துணை அதிபருமான உமர் சுலைமான எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இஃவானுல் முஸ்லிமீன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது எகிப்திய மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று இஃவான்களின் தலைவர்களில் ஒருவரும், அதிபர் பதவி வேட்பாளருமான ஹைராத் அல் ஷாத்திர் கூறியுள்ளார்.
திங்கள், 9 ஏப்ரல், 2012
பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு
மத்தியிலும், மாநிலத்திலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தி
யா நடத்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதற்கான பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நாளை ஏப்ரல் 10 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் காலை 11 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு தங்கள் பத்திரிக்கை நிருபரையும், புகைப்பட கலைஞரையும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்..
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற
ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.
இந்நிலையில் சிலர் காழ்ப்புணர்வுடன் ஹஜ் பயண
மானியம் குறித்து சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள்
மிகக்கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும், இந்தியாவிலிருந்து
மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணத்தை
மேற்கொண்டு வருகின்றனர். சக்தி பெற்ற முஸ்லிம்கள், கட்டாயமாக
மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணத்திற்கு அதற்கான பயண செலவுகள் அதிகரித்துள்ளதை
கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் மானியம் வழங்கி வருகிறது.
ஹைதராபாத் கலவரம்: மௌலானா நசீருதீன் வீட்டுக்காவலில்
ஹைதராபாத் : ஹைதராபாத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறை ஒருசார்புடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனை அறிவிக்கும் விதமாக மௌலானா நசீருதீனை காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவரத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மௌலானா நசீருதீனை காவல் நிலையத்திற்கு அழைத்து அவரை வீட்டினுள் இருக்குமாறு கூறியுள்ளனர்.
மௌலானா நசீருதீனை காவல்துறை அழைத்து பேசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர்கள் அவரின் குடும்பத்தினரை அணுகியுள்ளனர். அவரின் குடும்பத்தினர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள செய்தியில் நசீருதீனை அழைத்து தற்போதைய சூழ்நிலைக் குறித்து காவல்துறையினர் பேசியுள்ளனர் என்றனர்.
மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ...12 நாட்களே உள்ளன .......
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்தும் முஸ்லிம்களின் இட ஒது கீட்டிற்கானமாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ...
22 Appril 2012
கோவை / தஞ்சை / சென்னை / மதுரை / நெல்லை
இன்னும் 12 நாட்களே உள்ளன ....
இன்னும் 12 நாட்களே உள்ளன ....
இவண்...
மக்கள் தொடர்பு அலுவலர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்
* தமிழ்நாடு.
* தொடர்புக்கு : 00919789112841*
* மின்னஞ்சல் : pronellaiwest@gmail.com
* வெப்தளம் : http://popularfrontnellaiwest.blogspot.in/
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்
* தமிழ்நாடு.
* தொடர்புக்கு : 00919789112841*
* மின்னஞ்சல் : pronellaiwest@gmail.com
* வெப்தளம் : http://popularfrontnellaiwest.blogspot.in/
சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை
மேடக்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்த பின் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
ஹைதராபாத் : வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து ஹைதராபாதில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஏராளமானோருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் ஹைதராபாத் புது நகரம் அருகே உள்ள மதன்பேட், சைதாபாத், குர்மகுடா ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங்தள் இயக்கத்தைச்சேர்ந்த குண்டர்கள் சிலர் குர்மகுடா அருகேயுள்ள ஹனுமன் மந்திர் எனும் இடத்திலிருந்து பேரணியாக வந்தனர். ஹனுமன் மந்திர் அருகே முஸ்லிம்கள் மாட்டு இறைச்சியை வீசியதாக கூறி முஸ்லிம்களை எதிர்த்து பேரணி நடத்தினர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
மாவீரன் திப்பு சுல்த்தான் ஒரு வரலாற்று பார்வை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.
உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.
புதுடெல்லி : தீவிரவாத முத்திரைக் குத்தி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களின் விடுதலை சாத்தியமாகிறது.
2007-ஆம் ஆண்டு உ.பியில் லக்னோ, ஃபைஸாபாத், வாரணாசி ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றத்தை வாபஸ் பெற அரசு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
சனி, 7 ஏப்ரல், 2012
அன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ஒரு ஆதாரம்!
புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகமூடி மீண்டும் கழன்று விழுந்துள்ளது. அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு உணவை சமைத்து வழங்கியது ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உணவை சமைத்து பரிமாறியது தங்களது தொண்டர்கள்தாம் என்பதை வி.ஹெச்.பியின் சர்வதேச பொதுச்செயலாளர் சம்பத்தி ரவி கூறியுள்ளார்.
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
இடஒதுக்கீடு விழிப்புணர்வு வீடியோ
சென்னை: மீடியா ரிசேர்ச் ஃபளெண்டேஷன் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வியாழன், 5 ஏப்ரல், 2012
அல்லாஹ்வுக்காக 5 நொடிகள், Please!
அஹமதாபாத் : ’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.
அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
புதன், 4 ஏப்ரல், 2012
மின் கட்டணம் குறைப்பு: பேரவையில் ஜெ. அறிவிப்பு
சென்னை :- சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப் படுவதையும், சமூக நலன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுவதையும், லாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல் மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவைதான் பொதுத்துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் தமிழ்நாடு மின்சார வாரியம். எனது முந்தைய ஆட்சிக்காலத்தில், அதாவது 2001-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில், இன்னும் சொல்லப்போனால் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக புதுக்கோட்டையில் இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு கலந்தாய்வு கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக
புதுக்கோட்டையில் இடஒதுக்கீடு
மற்றும் சமூக மேம்பாடு கலந்தாய்வு கூட்டம் ஹோட்டல் ராயல் பார்கில்
நடைப்பெற்றது M .அபுபக்கர் சித்தீக் (மாவட்ட செயாலாளர், பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தலைமை உரையாற்றினார்
சிறப்புரை
K.S.M.இப்ராஹிம் (மாநில பொருளாலர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) A.அபுபக்கர்
சித்தீக்(SDPI மாநிலசெயல் குழு உறுப்பினர்) நன்றி உரையாற்றினார்
அபுபக்கர் சித்தீக்(SDPI மாவட்ட பொதுச்செயாலாளர்)
கூட்டத்திர்க்கு புதுக்கோட்டையில் உள்ள
ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.
இடஒதுக்கீடு மற்றும் சமூக மேம்பாடு பற்றி
கலந்தாய்வு செய்யப்பட்டது.
விழுப்புரம் கள்ளகுறிச்சி இடஒதுக்கீடு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் ................
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா சார்பாக இடஒதுக்கீடு சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் கள்ளகுறிச்சி மஹாலில்
நடைப்பெற்றது.
சிறப்புரை :
M.முஹமது ஷேக் அன்சாரி (மாநில
செயலாளர் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) கூட்டத்திர்க்கு விழுப்புரம்
கள்ளகுறிச்சி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இடஒதுக்கீடு பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டது .
பெங்களூர்: கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் புதிய தலைவராக துஃபைல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வருடத்திற்க் ஒரு முறை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை நடைபெறுவது வழக்கம் அதன்படி கர்நாடக மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.பொதுச்செயலாளராக அப்துல் ரஹீம், துணைத்தலைவராக மெஹஃபூஸ் அஜன், செயலாளர்களாக ஹைதர் ஹபீப் மற்றும் சொஹைல் மற்றும் பொருளாளராக தஃப்ஸீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இனி வரக்கூடிய ஒருவருடத்திற்கான கேம்பஸ் ஃப்ரண்டின் கர்நாடக மாநில நிர்வாகிகளாக செயல்படுவார்கள்.
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
சிறுபான்மை சமூகத்தின் அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை!
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் அரசியல் விழிப்புணர்வை சிறுபான்மை சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் ரீதியாக பல இடங்களில் "பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃபரென்ஸ்" (மக்கள் அரசியல் மாநாட்டை) எஸ்.டி.பி.ஐ கடந்த மாதம் முழுவதும் நடத்தி வந்தது. கடந்த மாதம் இறுதியில் மைசூர் கல்யான்கிரியிலுள்ள லித்கார் மைதானத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் 15,000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பிற்படுத்தப்பட்ட மக்கள் குழுவின் முன்னால் தலைவர் டாக்டர் பி.எஸ். துவார்கந்த் கூறும்போது "தலித், சிறுபான்மை மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலனவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகளாகவே செயல்படுகிறார்கள். தங்களை வெற்றி பெறச் செய்த தன் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வலிமைக்காகவும் எத்தகைய பணிகளையும் அவர்கள் செய்வதற்கு தயாராக இல்லை. தங்களை பாதுகாப்பாக வளர்த்தெடுத்த தம் சமூக மக்களை அவர்கள் மறந்துவிட்டார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி:உயர் அதிகாரப் பதவிகளில் முஸ்லிம்கள் நியமனம்: பா.ஜ.க கொதிப்பு!
லக்னோ : கடந்த மாதம் மூத்த முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜாவேத் உஸ்மானி உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழுவின்(BMAC) கன்வீனர் ஸஃபர்யாப் ஜீலானி உ.பி மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாவேத் உஸ்மானியை தொடர்ந்து ஜீலானி உயர் அதிகாரப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது பா.ஜ.கவுக்கு வயிற்றெரிச்சலை கடுமையாக கிளப்பியுள்ளது.
தமிழகத்தின் இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு!
புதுடெல்லி : தமிழகத்தின் காரைக்குடியைச் சார்ந்த நீதிபதி ஃபக்கீர் முஹம்மது இப்ராஹீம் கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எச். கபாடியா நேற்று(திங்கள்கிழமை) காலை கலீஃபுல்லாஹ்வுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ஜம்மு-கஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கலீஃபுல்லாஹ் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 31 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது 5 இடங்கள் காலியாக உள்ளன.
திங்கள், 2 ஏப்ரல், 2012
கோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டம்
எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மத்தியில் தனி இடஒதுக்கீடு, மாநிலத்தில் உரிய இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய 5 இடங்களில் நடத்த இருக்கின்றது. இப்போராடத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் கரும்புகடை, சாரமேடு பகுதியில் மாலை 7.00மணியளவில் நடைபெற்றது.
NCHRO-வின் புதிய தேசிய தலைவராக பேராசிரியர் நாகரி பாபையா தேர்வு!
ஹைதராபாத் : தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமை (NCHRO) வின் தேசிய பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுகிழமை ஹைதராபாத்திலுள்ள மெஹபூர் ஹுஸைன் மஹாலில் வைத்து நடைபெற்றது. என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் தேசிய ஒருங்கினைப்பாளர் ரேனி ஏலின் இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் நாகரி பாபையா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் இரண்டாண்டிற்கான அறிக்கையை சமர்பித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.
![]() |
| வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப் ஆண்டறிக்கையை சமர்பித்தார் |
2012-2014ற்கான என்.சி.ஹெச்.ஆர்.ஓவின் புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஆந்திராவில் வகுப்புவாத வன்முறை! நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்
ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தளத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான காபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர்.
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
பெரிய உணவு வர்த்தக நிறுவனங்கள் நச்சுத்தன்மையை மூடி மறைக்கின்றன – அறிக்கை!
புதுடெல்லி : கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






