கொல்கத்தா : கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள், சுய தொழில் உதவி ஆகிய துறைகளில் மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் நடத்தும் நீண்டகால திட்டங்களின் ஒரு பகுதியாக
கம்யூனிட்டி செண்டர்கள், குடிநீர்திட்டம், வட்டியில்லா சிறுகடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் ரிக்ஷா விநியோகம் ஆகியவற்றின் துவக்க நிகழ்ச்சிகள் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஃபவுண்டேசனின் சேர்மன் இ.அபூபக்கர் துவக்கி வைக்கிறார்.