பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது அதிக அளவில் கவனம் செலுத்து வரும் துறையான சமூக மேம்பாட்டுத்து துறையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கம்பளிப்போர்வையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கம்பளிப் போர்வைகளை இலவசமாக வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்.
திப்பு சுல்தான் எடுகேஷன் சொஸைட்டியின் தலைவர் வழக்கறிஞர் அஜிமுதீன், பாப்புலர் ஃப்ரண்டின் குல்பர்கா மாவட்ட தலைவர் டாக்டர் டாக்டர் ஹமீது மக்தூமி ஷாஹித் நஸீர், துணைத்தலைவர் செய்யது ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.