நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 டிசம்பர், 2011

2011:வன்முறைகள் பெருமளவு குறைந்துள்ளது – ப.சிதம்பரம்


P-Chidambaram
மும்பை : 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைந்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜம்மு-கஷ்மீர் மாநிலம், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் வன்முறை வெகுவாக குறைந்திருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது:
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு 31 பொதுமக்களும், 33 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.
அதே சமயம் 2010-ல் 47 பொதுமக்களும், 69 வீரர்களும் உயிரிழந்தனர். அங்கு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதால், 23 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பஞ்சாயத்துத் தேர்தல் நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களில் 69 பொதுமக்களும், 32 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர். (2010-ல் 94 பொதுமக்களும், 20 வீரர்களும் உயிரிழந்தனர்). இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்கள் அரசுடன் பேச்சு நடத்த முன்வந்ததால், மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக உல்ஃபா, என்.டி.எஃப்.பி உள்ளிட்ட அமைப்புகள் பேச்சு நடத்த முன்வந்தன.
கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா, யு.பி.டி.எஸ். ஆகிய அமைப்புகளுடன் அரசு அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது.
நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் வன்முறை குறையாவிட்டாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிலைமை மேம்பட்டுள்ளது.
இப்பகுதிகளில், இந்த ஆண்டு 447 பொதுமக்களும், 142 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர். (2010-ல் முறையே 718, 285 பேர் உயிரிழந்தனர்)
கடந்த ஜூலையில் மும்பையிலும், செப்டம்பரில் தில்லியிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள், நாட்டில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை, மகாராஷ்டிர முதல்வருடன் இணைந்து கண்காணித்து வருகிறேன். தில்லி குண்டு வெடிப்பு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் நக்ஸலைட் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எனினும், இங்கு நிலைமை சீரடையாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 2011-ம் ஆண்டு திருப்திகரமாக இருந்தது. எனினும், சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
உள்நாட்டில் நிலவும் அச்சுறுத்தல்களை ஒடுக்க, அடுத்த 3 ஆண்டுகளில் பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கட்டமைப்புகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளோம்.
தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பதுடன், வளர்ச்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தப்படும். ஜனநாயக சமூகத்தில் வன்முறைக்குப் பதிலாக பேச்சு நடத்துவதன் மூலமே கருத்து வேறுபாடுகளைக் களைய முடியும் என்பதை தீவிரவாதிகளுக்கு உணர்த்துவோம் என்றார் ப.சிதம்பரம்.