நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 டிசம்பர், 2011

லோக்பால் மற்றும் அரசுப் பணிகளில் சிறுபான்மையினருக்கு தனி ஒதுக்கீடு - பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டு!





புதுடெல்லி : 22.12.2011 அன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவில் உள்ள முக்கிய அம்சங்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலர்கள் கூட்டம் கூறியுள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்ததுடன் லோக்பால்-லோக் ஆயுக்தா ஆகியவற்றில் 50%த்தை எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

லோக்பால் பில்லின் மூலத்தில் இருப்பது போன்றல்லாமல் சிறுபான்மையினர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற அம்சம் குறிப்பிடத்தகுந்தது. பிற்படுத்தப்பட்ட கட்சிதலைவர்களான முலாயம் சிங் யாதவ், மற்றும் லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் உறுதியான நடவடிக்கைகள் தான் இது சாத்தியமாக காரணமாகும்.

மஜ்லிஸே இத்திஹாதுல்  முஸ்லிமீன் (எம்.ஐஎம்) கட்சி தவிர இன்னபிற கட்சிகளின் முஸ்லிம் எம்.பி.க்கள் நாங்கள் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் இருக்கிறோம் என சொல்லிக்கொண்டு இது போன்ற முக்கியமான நிகழ்வுகளில் இருந்து கருத்து எதுவும் சொல்லாமல் விலகி இருப்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய விஷயமாகும்.

பா.ஜ.க மற்றும் அதனின் கூட்டணி கட்சியினர் இதனை எதிர்த்து வருவதிலிருந்தே அவர்களின் கொள்கையான சிறுபான்மை விரோத செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலர்கள் கூட்டம் அன்னா ஹஸாராவின் குழுவினர் லோக்பால் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து தங்களின் நிலைபாடுகளை முன்வைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளது பாப்புலர் ஃப்ரண்ட்.

மற்றொரு தீர்மானத்தில், நிலவில் இருக்கும் ஓபிசி ஒதுக்கீட்டினுள் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முடிவை வரவேற்றுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட். இருப்பினும் மத்திய அமைச்சரவின் முடிவான சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் 27% ஓபிசி ஒதுக்கீட்டினுள் 4.5% இடஒதுக்கீடு என்பது போதுமானது இல்லை, இது இந்தியாவில் வாழும் மத சிறுபான்மையினருக்கு நான்கில் ஒரு பகுதியினருக்குத்தான் பயனளிக்கும்.

எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்கனவே வைத்த கோரிக்கையின்படி சிறுபான்மையினருக்கு 13.5% உள் ஒதுக்கீடும் அதில் 10% தனி ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும். அதே போன்று இந்தியாவில் உள்ள அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் (ஓ.பி.சி) இணைத்து முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டின் பயனை கிடைக்கப் பெறச்செய்ய முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே அரசியல் கட்சிகளான குறிப்பாக தலித் பிற்படுத்தப்பட்ட் வகுப்பைச் சேர்ந்த எஸ்.பி, ஆர்.ஜே.டி, பி.எஸ்.பி, மற்றும் எல்.ஜே.பி கட்சிகள் கேபினட்டின் இந்த முடிவை எதிர்க்க வேண்டாம், ஏனெனில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்கு இது ஒரு துவக்கமாக அமையும் வாய்ப்பு என பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த ஒதுக்கீட்டை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலும் நீதிமன்றம் மற்றும் இன்ன பிற சக்திகள் இதற்கு இடையூறு செய்யாத வகையிலும் ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.