புதுடெல்லி : கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
வட இந்தியாவை பொருத்தவரை எந்த குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும் ஆஜம்கர் நகரிலிருந்தே பெரும்பாலான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறே ஆஜம்கர் நகரைச் சேர்ந்த ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இருப்பதாக குஜராத் காவல்துறையினர் கூறி கைது செய்துள்ளனர். குஜராத் திவீரவாத எதிர்ப்பு படையினரும் ஹபீபை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.
டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆஜம்கர் நகர காவல்துறையினரின் உதவியோடு குஜராத் காவல்துறையினர் ஹபீபை கைது செய்துள்ளனர். ஆஜம்கர் அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வந்திருக்கிறார் ஹபீப், அங்கு வைத்து தான் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிக்கையில் ஹபீப் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று கேரளாவில் திவீரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பயிற்ச்சி பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹபீப் மீது இதுவரை ஆஜம்கரிலோ அல்லது அம்பேத்கர் நகரிலோ அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
உத்திர பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை காவல்துறையினர் கூறும்போது சிமி இயக்கத்தோடு தொடர்புடையவர் என்று சந்தேகத்தின் பெயரில் ஆஜம்கர் நகரிலிருந்து ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஆஜம்கரில் புதிதாக கடை ஒன்றை திறந்தார். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை அதிகரித்தவுடன் ஹபீப் ஆஜம்கரிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டதாக கூறுகின்ற்னர்.
ஹபீபின் சகோதரன் ரஷீத் மற்றும் அவரது உறவினர் முஹம்மது கைஸ் காவல்துறையினர் கூறும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். ஹபீப் மிது பொய்யாகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறுகின்றனர்.
மஷிஹுதீன் சஞ்சாரி என்னும் சமூக ஆர்வளர் கூறும் போது தீவிரவாத எதிர்ப்பு செயல் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றனர். ஹபீப் கைது செய்யப்பட்ட பின்பு அவரது குடும்பத்திற்கு அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆஜம்கர் நகரில் ஹபீபின் கைது மூலமாக தேவையில்லாத பதட்டத்தை காவல்துறையினர் ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சஞ்சாரி கூறும்போது இதுவரை ஆஜம்கர் நகரிலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரப்பூர்வ நிரூபிக்கப்பட்ட வழக்குகள் இல்லை. ஒவ்வொரு துக்க நிகழ்வுகள் நடைபெறும் போது நாளடைவில் மக்கள் அதை மறந்துவிட்டு தத்தமது வேலைகளில் ஈடுபடத்தொடங்குவார்கள். ஆனால் ஆஜம்கர் நகர மக்கள் மட்டும் நித்தம் நித்தம் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாக சஞ்சாரி கூறினார்.