நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 டிசம்பர், 2011

கைவிரல் நகங்கள் நிறமாற்றம்: இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறி!


Commonnailproblems_1
சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.
அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.
இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.
மேலும், இரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்கவேண்டிய `பிங்க்’ நிறம் மறைந்து, வெளுத்துவிடும்.
இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள் மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வது அவசியம்.
அல்லது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, விட்டமின் பி-12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.