புதுடெல்லி : ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அரசு சாரா அமைப்பான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், டெல்லியில் தேர்வுச் செய்யப்பட்ட நபர்களுக்கு வட்டியில்லா கடன் உதவியும், சுயதொழில்
புரிவதற்கான உபகரணங்களை வழங்கியது.
புரிவதற்கான உபகரணங்களை வழங்கியது.
பாட்லா ஹவுஸை சார்ந்த ஊனமுற்றவரான முஹம்மது தானிஷிற்கு வியாபாரம் துவங்குவதற்கான வட்டியில்லா கடன் உதவியும், ஷாஹீன்பாகைச் சார்ந்த சுரய்யா பர்வீனுக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உதவி திட்டங்களை வழங்கி உரை நிகழ்த்திய இ.அபூபக்கர் அவர்கள் தனது உரையில், ‘இங்கு கொடுப்பவரும், வாங்குபவரும் இடையே வித்தியாசமில்லை. பரஸ்பரம் உதவி சமூகத்தின் முன்னேற்றத்தில் பங்காளியாக மாறுகிறோம்.’ என குறிப்பிட்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர்.முர்ஷித் ஆலம் தனது உரையில்,’குடிமக்களின் நலனுக்காக ஏராளமான அரசு திட்டங்கள் இருந்த போதிலும் அவையெல்லாம் தேவையுடைய மக்களிடம் சென்று அடைவதில்லை. இச்சூழலில் தேவையுடைய நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவும் ரிஹாபின் முயற்சி விலை மதிக்க முடியாதது’ என கூறினார்.
ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் பொதுச்செயலாளர் ஒ.எம்.அப்துஸ் ஸலாம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், எஸ்.டி.பி.ஐ.இன் எ.ஸயீத், பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், மவ்லான கலீமுல்லாஹ், அப்துற்றஷீத் அக்வான், ஜாபிர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.