நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 டிசம்பர், 2011

செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே


19864_L_anna-hazare
மும்பை : வலுவான லோக்பால் மசோதாவிற்காக மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹஸாரே மக்கள் ஆதரவு குறைவு மற்றும் உடல்நிலை சீர்குலைவு ஆகிய காரணங்களால் 3 நாட்கள் உண்ணாவிரதத்தை 2 நாளில் கைவிட்டார்.
இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஹஸாரேவை நோக்கி
செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திணறடித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மிகக் குறைவாக மக்கள் வந்திருப்பது குறித்து ஒரு நிருபர் கேட்டதற்கு, “என்னிடம் அதிகாரமில்லை, பணமுமில்லை. ஆனாலும் மக்கள் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஏற்பட இருக்கும் எழுச்சியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று பதிலளித்தார் ஹஸாரே.
காங்கிரஸை எதிர்ப்பது ஏன்? உங்களுடைய லோக்பால் மசோதாவுக்கு பல கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது காங்கிரஸை மட்டுமே ஏன் வில்லனாகப்
பார்க்கிறீர்கள்? சோனியாவையும், ராகுல் காந்தியையும் ஏன் குறிவைத்துத் தாக்குகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் இந்த நாட்டைச் சீரழித்தது. கடந்த 5 மாதங்களில் காங்கிரஸ் கட்சி எங்களை வஞ்சித்து விட்டது. பிற கட்சிகளை எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்றார்.
மக்களவையில் ஹஸாரேவின் போராட்டத்துக்கு எதிராக பாஜக நடந்து கொண்டதை ஒரு செய்தியாளர் சுட்டிக் காட்டினார். பாஜகவின் துரோகத்தை எதிர்த்து பிரசாரம் செய்வீர்களா என்றும் கேட்டார்.
இந்தக் கேள்வியால் அதிருப்தியடைந்த ஹஸாரே, “காங்கிரஸ்தான் எங்களுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது” என்று கூறிவிட்டு மேடையை விட்டு சட்டென இறங்கிச் சென்றுவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.
இதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அரவிந்த் கேஜரிவாலும், மணீஷ் சிசோடியாவும் பதிலளித்தனர்.
வருங்காலத் செயல் திட்டம் பற்றி விளக்கிய கேஜ்ரிவால், “லோக்பால் மசோதாவில் இன்னும் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசுக்கு நெருக்கடி தருவோம்.
போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.
லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் அரசின் மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பதால், லோக்பால் அமைப்பின் அதிகாரம் கூடவோ குறையவோ போவதில்லை” என்றார் கேஜரிவால்.
உண்ணாவிரத மைதானத்தில் கூட்டத்தைத் திரட்டுவதற்காக ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றியும் நிருபர்கள் கேட்டனர். ஆனால் இந்த பஸ்களுக்கு தாங்கள் பணம் தரவில்லை என ஹஸாரே குழுவினர் தெரிவித்தனர்.