நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 டிசம்பர், 2011

கடையில் விவரம் தந்தால் போதும் ரேஷன்கார்டு புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் தொடக்கம்...


சென்னை : ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கிறது. பொருள் வாங்கும் கடையிலேயே விவரத்தை சொல்லி புதுப்பித்துக் கொள்ளலாம். குடும்ப தலைவர் போக வேண்டிய கட்டாயமில்லை.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் வரும் 2012 ஜனவரி 1ம் தேதியில் இருந்து 2012 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேல்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு தரப்படும். குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும்போது இதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
* அட்டைகளில் பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், கூடுதல் நபர் சேர்த்தல், நீக்குதல், காஸ் சிலிண்டர் எண்ணிக்கை விவரம் ஆகிய விவரங்களை சேர்க்க வேண்டுமானால் சொல்லலாம்.
* இந்த விவரங்கள் அடிப்படையில் நேரில் விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்படும்.
* குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி 2012 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.
* குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கடைக்கு சென்று விவரம் சொன்னால் போதும். குடும்ப தலைவர் வர வேண்டிய கட்டாயமில்லை.
* அங்காடி பணியாளர்களிடம் தேவையான விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது.
* அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்படும்.
* பின், 2012ம் ஆண்டிற்கான வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும். இத்துடன் குடும்ப அட்டை புதுப்பித் தல் பணி முடிவு பெறுகிறது.
* இந்த அட்டையை 2012 இறுதி வரை பயன்படுத்த முடியும்.