நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 19 ஜனவரி, 2012

கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்


லண்டன் : கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிப்பதற்கு, இதுக்குறித்த முன்னறிவிப்பை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம் என பிரிட்டன் நிவாரண அமைப்புக்கள் கூறியுள்ளன.

சோமாலியா,கென்யா,எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் கடந்த ஆண்டு மரணித்தனர்.

கண் கண்ட கவ்லா


இஸ்லாத்​தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்​கொண்ட ​பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சி​லைக​ளையும் வணங்கிக்​​கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்​தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க​​ பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்​கை​யை வாகாய் புரட்டிப் ​போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக ​நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவி​டை​ செய்வதில் அலாதி ஆனந்தம் ​அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்​மையா​ரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.

கண் கண்ட கவ்லா


இஸ்லாத்​தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்​கொண்ட ​பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சி​லைக​ளையும் வணங்கிக்​​கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்​தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க​​ பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்​கை​யை வாகாய் புரட்டிப் ​போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக ​நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவி​டை​ செய்வதில் அலாதி ஆனந்தம் ​அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்​மையா​ரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.
நபிகளாருக்கு இ​றைச்​செய்தி துவங்கிய 10வது வருடம் அன்​னை கதீஜா  அம்​மையார் ம​றைந்த​​பொழுது அவரது இழப்பால் ஏற்பட்ட ​வெற்றிடத்​தை உட​னே நிரப்ப ​வேண்டும் என்று கவ்லா உணர்ந்தார். 25 ஆண்டுகளாக அனைத்து வ​கையிலும் அண்ணலாருக்கு அரும்​பெரும் து​ணையாக இருந்த கதீஜா அம்மையாரின் ம​றைவு அண்ணலாருக்குப் ​பெரும் ​சோகத்​தை உண்டாக்கியிருந்தது. அண்ணலார் திரும்பவும் திருமணம் ​செய்து​கொள்ள​வேண்டும் என்று கவ்லா அண்ணலாரிடம் வலியுறுத்தினார்.
அத்​தோடு அண்ணலாருக்குப் ​பொருத்தமானவர் யார் என்பதையும் அவர் மனதில் ​வைத்திருந்தார். நபிகளார் கவ்லாவிடம் யா​ரை மணமுடிக்கலாம் என்று ​கேட்ட​பொழுது, “நீங்கள் விரும்புவது கன்னிப்​ பெண்​ணையா, முதிர்ந்த ​பெண்​ணையா?” என்று கவ்லா​ கேட்டார்.”இருவரது​ பெய​ரையும்​சொல்லுங்கள்” என்று அண்ணலார்​ கேட்டார்கள்.
அதற்கு கவ்லா(ரலி) இவ்வாறு பதிலளித்தார்: “கன்னிப் ​பெண் ஆயிஷா. முதிர்ந்த ​பெண் ஸவ்தா.” இருவ​ரையு​ம் ​பெண்​ கேட்குமாறு அண்ணலார் ​கேட்டுக்​கொண்டார்கள்.
கவ்லா(ரலி) அந்த இருவரிடமும் ​சென்று, “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கண்ணியத்​தை நாடுகிறான்” என்று​ சொன்னார். அந்த இருவரு​மே அண்ணலா​ரை மணமுடிக்க சம்மதம் ​தெரிவித்தார்கள். அண்ணலார் முதலில் மக்காவில் இருக்கும்​ பொழு​தே ஸவ்தா(ரலி) அவர்க​ளைத் திருமணம் முடித்தார்கள். மூன்று வருடம் கழித்து மதீனாவில்​ வைத்து ஆயிஷா(ரலி) அவர்க​ளை மணமுடித்தார்கள்.
மதீனாவுக்குப் புலம்​பெயர்ந்த பிறகும் கவ்லா(ரலி) அண்ணலாரின் வீட்டுக்குத் ​தொடர்ந்து ​செல்பவர்களாக இருந்தார்கள். அண்ணலாரின் மனைவிமார்களும் கவ்லா​ வரும்​பொழு​தெல்லாம் அவ​ரை வர​வேற்று உபசரிப்பார்கள். ஒரு தடவை கவ்லா மிகவும் கவ​லையாகக் காணப்பட்டார். ப​ழைய ஆடைகள் அணிந்து, அணிகலன்கள் எதுவும் அணிந்து​கொள்ளாமல், தன்​னை அலங்கரித்துக் ​கொள்ளாமல் ​வெறுமையாகக் காட்சியளித்தார். அவரு​டைய கணவர் வசதியானவராக இருந்தும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று முஃமின்களின் தாய்மார்கள் வினவிய​​பொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அவர் அவருக்​கே உரிய ஓர் உலகில் வாழ்ந்து வருகிறார். தினமும் ​நோன்பு ​நோற்கிறார். ஒவ்​வொரு இரவும் நின்று வணங்குகிறார்.”
அண்ணலாரிடம் அவர்களின் ம​னைவிமார்கள் இது குறித்து முறையிட்டார்கள். இ​றைத்தூதர் முஹம்மத் (ஸல்) கவ்லாவின் கணவரான உதுமான் இப்னு மஸ்ஊன் (ரலி) அவர்க​ளை அ​ழைத்து, “நீங்கள் பின்பற்ற​ வேண்டிய நபர் நான்தா​னே” என்று ​கேட்டார்கள். உதுமான் இத​னைக்​ ​கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் ​போனார். அவரது இரவு வணக்கம் குறித்தும், ​நோன்பு குறித்தும் அவரிடம் ​கேட்டு உறுதிப்படுத்திய நபிகளார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவ்வாறு ​செய்யாதே. உன் கண்களுக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. உன் உடலுக்கு உன் ​மேல் உரிமை உண்டு. உன் குடும்பத்துக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. இரவு வணங்கவும் ​செய். உறங்கவும் ​செய். சில நாட்கள் ​நோன்பு ​நோற்றுக்​கொள். சில நாட்கள் ​நோன்பை விடு.”
உதுமான் இப்னுமஸ்ஊன்(ரலி) அண்ணலாரின் கட்டளைக்கிணங்க நடந்து​கொண்டார். அதன்பிறகு நபிகளாரின் மனைவிமார்களிடம் வந்த கவ்லா தன்​னை அலங்கரித்துக்​கொண்டு, நல்ல ஆ​​டைகள் அணிந்து மகிழ்ச்சியாக மணப்​பெண்​போல் காட்சியளித்தார்.
இந்த உதுமான் இப்னுமஸ்ஊன் (ரலி) அவர்கள்தான் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களில் முதன்முதலில் மதீனாவில் மரணித்தவர். அவ​ரைப் பற்றி கவ்லா(ரலி) ஓர் அழகிய கவி​தை ஒன்​றை எழுதினார். அது அதிக இலக்கியச் ​செறிவுடன் உயர்ந்த ந​டையில் அ​மைந்திருந்தது.
இப்படி மாதர் குலத்தின் மாதிரி வடிவமாகத் திகழ்ந்த கவ்லா(ரலி) அவர்களிடமிருந்து நாம் இஸ்லாமிய ஈடுபாட்​டையும், ஈர்ப்பையும் பாடமாகப் ​பெறலாம்.

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்


புதுடெல்லி : புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரிஜினலை சமர்ப்பிக்க வேண்டும்.

ஈரானையும், சிரியாவையும் தாக்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை


மாஸ்கோ : ஈரான்,சிரியா பிரச்சனைகள் தொடர்பாக அந்நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானை தாக்குவது பெரும் துயரத்தை உருவாக்கும் என கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பிராந்தியம் முழுவதும் அகதிகள் பிரச்சனையால் நெருக்கடியுல் ஆழ்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்


அங்காரா : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் கூட மிதவாதி என குறிப்பிடும் ரஜப் தய்யிப் எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியை பயங்கரவாத கட்சியாக முத்திரைக் குத்தும் டெக்ஸாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி மன்னிப்பு கோரவேண்டும் என அமெரிக்காவில் உள்ள துருக்கி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதன், 18 ஜனவரி, 2012

ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை


மும்பை : மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளை குறித்து விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜோஷியின் கொலை வழக்கு விசாரணை முக்கியத்துவமாக மாறும்.

சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் ஆதாரங்கள் இதர வழக்குகளுடன் பிணைந்து கிடப்பதால் இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லோக் ஆயுக்தா என்பது மோடியின் கபட நாடகம் – காங்கிரஸ் குற்றச்சாற்று


புதுடெல்லி : குஜராத் மாநிலத்தில் ஆளுநர் கமலா பெனிவால் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து குஜராத் முதல்வர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியின் கபடநாடகத்திற்கும், பா.ஜ.கவின் இரட்டை வேடத்திற்கும் இன்னொரு சட்டரீதியான விளக்கம்தான் நீதிமன்ற தீர்ப்பு என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

ஹரேன் பாண்டியா கொலை: குஜராத் மோடி அரசுக்கு நோட்டீஸ்


அஹ்மதாபாத் : குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறு விசாரணை கோரி அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சி.பி.ஐக்கும், குஜராத் மோடி அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹரேன் பாண்டியா மனைவியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி ஆறாம் தேதி முதல் நடைபெறும். விசாரணை துவங்குவதற்கு முன் பதிலளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கும், மோடி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆன் ஆஃப்கானில்


காபூல் : உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இத்திருக்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரபல கையெழுத்தாளர் முஹம்மது ஸாபிர் காதிரியும், ஒன்பது மாணவர்களும் இணைந்து இத்திருக்குர்ஆன் பிரதியை தயாரித்துள்ளனர். வசனங்களின் முக்கியத்துவத்தைக் குறித்து குறிப்பிட்ட நிறத்தில் சில பகுதிகள் உள்ளன.

உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா?


ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.

* பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். வீரிய விருத்தியும் உண்டாகும்.


ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail. I.D கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். எல்லா M.L.A.க்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால்... உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது..... 



இருளர் பெண்கள்:போலீசாரை கைது செய்யாதது ஏன்? -ஜெ.அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்


சென்னை : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சார்ந்த 5 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்யாததற்கு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும்: மோடி அரசின் மனு தள்ளுபடி


அஹ்மதாபாத் : குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

மர்கசுல் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு மையம் திறப்புவிழா

மஞ்சேரி கேரளா :  இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அதன் போதனைகளையும் எடுத்துச் சொல்வதற்கான பிரச்சார மையம் புதிதாக உதயமாகியுள்ளது. இஸ்லாத்தை அறிய முற்படுபவருக்கு இஸ்லாமிய கல்வியை பயிற்றுவிப்பதுக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணிகளுக்காகவும் சத்யா சாரணி அறக்கட்டளையின் கீழ் மர்கசுல் ஹிதாயா கல்வி மையம் மலப்புரம் மஞ்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.

Dr. Mansoor Alam, chairman, Institute of Objective Studies, inaugurates Markazul Hidaya educational complex at Manjeri

இந்த புதிய இஸ்லாமிய மையத்தை டெல்லி இன்ஸ்டிடுட் ஆப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் தலைவர் டாக்டர் மன்சூர் ஆலம் அவர்கள் திறந்து வைத்தார்.


படித்திவிட்டீர்களா இந்த மாதம்?


விக்கிபீடியா இன்று பணி நிறுத்தம்


வாஷிங்டன் : காப்புரிமை இல்லாமல் திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதை எதிர்த்து அமெரிக்க காங்கிரஸ் சட்டம் நிறைவேற்ற உள்ளது.

இதனை எதிர்த்து ஆன்லைன் என்சைக்ளோபீடியா இணையதளமான விக்கிபீடியா அதன் ஆங்கில பதிப்பை இன்று(புதன்கிழமை) தனது பணியை 24 மணிநேரம் நிறுத்திவைத்துள்ளது.

உ.பி சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது.


புதுடெல்லி : அடுத்த மாதம் துவங்கவிருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .

மொத்தம் 15 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது.

உ.பி தேர்தலில் முக்கிய பிரச்சார ஆயுதம் உள் ஒதுக்கீடு


புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வாத-பிரதிவாதங்கள் உ.பி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

மாநிலத்தில் நிர்ணாயக வாக்கு வங்கியான முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு அரசியல்கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுடன் பிறக்கட்சிகள் மீது பழி சுமத்துவதிலும் மும்முரமாக உள்ளன.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமாம்! – உச்சநீதிமன்றம் கூறுகிறது


புதுடெல்லி : பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டும் என கோரி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த வேளையில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தை தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இ-மெயில் திருட்டுதனமாக கண்காணிப்பு – விசாரணைக்கு முதல்வர் சாண்டி உத்தரவு

திருவனந்தபுரம் : முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் உள்பட கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்களின் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக உளவுத்துறை கண்காணிப்பது தொடர்பான செய்தியைக் குறித்து அவசரமாக விசாரணை நடத்த முதல்வர் 
உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விசாரணையை நடத்தும் பொறுப்பு இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பி சென்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத வழக்கை ஜோடித்த எகிப்து ராணுவ அரசு – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்


கெய்ரோ : அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு காரணம் கூற எகிப்தின் ராணுவ அரசு பயங்கரவாத வழக்கை ஜோடித்ததாக மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
சுற்றுலா மையங்கள் மற்று எரிவாயு பைப்லைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் எகிப்திய ராணுவம் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் மீது பழியை போட்டு அந்த இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. மேலும் அவரை கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இல்லை என அரசு வழக்குரைஞர் கூறியபோதிலும் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்

தம்மாம் : வெளிநாடுகளில் பணியாற்றுவோரில் மிக அதிக அளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலக வங்கியின் புள்ளிவிபரப்படி 2011-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவுக்கு 57.8 பில்லியன் டாலர்கள் வந்துள்ளது. இதில் பெரும் தொகையும் 6 வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்து ஆகும்.

திங்கள், 16 ஜனவரி, 2012

முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்


புதுடெல்லி : உ.பி மாநிலத்தில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் நபரின்  போஸ்ட் மார்ட்டம் நடத்த காலதாமதம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு உ.பி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜவுன்பூர் மாவட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் போஸ்ட்மார்ட்டம் நடத்த காலதாமதம் ஏற்பட்டதால் அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இச்செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உ.பி:பா.ஜ.கவின் வகுப்புவாத அரசியலும், காங்கிரஸின் தந்திரங்களும்


புதுடெல்லி : பாட்லா ஹவுஸ் முதல் முஸ்லிம்-ஜாட் இடஒதுக்கீடு வரை, ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள் முதல் தலித் பாரபட்சம் வரை, 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முதல் உள்ளூரில் நடக்கும் க்ரிமினல் குற்றங்கள் வரை என உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சர்ச்சைக்குரிய விஷயங்களாக மாறியுள்ளன. இவையில் ஏதேனும் ஒன்று உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

11,19,16,689 வாக்காளர்களை கொண்ட 403 தொகுதிகளை உடைய உ.பியின் ஆட்சியை பிடிப்பது என்பது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கனவாகும்.

இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!


புதுடெல்லி : இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய அரசு முயன்றுவருகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைக்கால அவசரகதியிலான இஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமும் இதுவாகும்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

விஞ்ஞானி கொல்லப்பட்ட விவகாரம்: ஈரான் கண்டனம்

டெஹ்ரான் :  தன் நாட்டு விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாடு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறினாலும், அவர்கள் மண்டலங்கள் ரீதியான பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன, அதுவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் பழிவாங்கல் நடவடிக்கையாக எடுத்து வருகின்றன... இவ்வாறு ஒரு தொலைக்காட்சி சேனலின் ஒலிபரப்பில், ஈரான் விஞ்ஞானி கொலை குறித்துப் பேசியபோது,  ஈரான் நாட்டின் ஜெனரல் கூறினார்.

ரஷ்யா ஆளில்லா விண்கலம் இன்று பூமியில் விழ வாய்ப்பு

மாஸ்கோ: செவ்வாய் கிரகத்தினை ஆராய ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் தோல்வியடைந்ததால், அது இன்று பூமியில் விழ வாய்‌ப்பு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் கடல் பகுதிகளில் விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மும்பையில்வரப்போகுது நீளபாலம்

மும்பை :  மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பந்த்ரா-ஓர்லி கடல் பாலம் 2009ஜூன் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் மும்பையின் வாகன நெரிசல் ஓரளவு குறைந்தது. தற்போது பந்த்ராவிலிருந்து வெர்சோவா வரை பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பந்த்ரா-ஓர்லி பாலத்திலிருந்து இணைப்பு பாலமாக இது கட்டப்படுகிறது. 10கிலோமீட்டர் நீளத்திற்கு அமையப்போகும் இந்தப்பாலம் கட்டி முடிக்கப்படும் போது உலகத்தின் நீளமான பாலங்களின் பட்டியலில் இடம் பெறும்.

உதயமாகும் புதிய மாநிலங்கள்

புகழ்பெற்ற ஒரு நிறுவனம் திடீரென நான்காகப் பிளவுபட்டு, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனிப் பெயர்ப்பலகை, தனி நிர்வாகம், தனி வருமானம் என்றாகிவிட்டால் எல்லோருக்கும் முதலில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 


அத்தகைய அதிர்ச்சியை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியிருக்கிறார் செல்வி மாயாவதி. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்போவதாக அதன் முதல்வர் மாயாவதி அறிவித்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.


கடையநல்லூர் தொகுதியில் அடிப்படை திட்டங்களுக்கு பரிந்துரை


கடையநல்லூர் : கடையநல்லூர் தொகுதியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி கட்டடம், அங்கன்வாடி கட்டடங்கள், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை திட்டங்களுக்கு பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் அடிப்படையில் கடையநல்லூர் தொகுதியில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2011-12ம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், கல்வி மேம்பாட்டிற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.