நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 9 நவம்பர், 2011

குஜராத்:சர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் 31 பேர் குற்றவாளிகள்

sadarpura
அஹ்மதாபாத் : 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது சர்தார்புராவில் 33 பேரை உயிரோடு தீவைத்து கொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில் 42 நபர்களை குஜராத் விரைவு நீதிமன்றம் விடுவித்துள்ளது. மீதமுள்ள 31 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது.

2002 பிப்ரவரி 28-ஆம் தேதி இரவில் இவ்வழக்கு தொடர்பான மிகக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.சர்தார்புரா வீடுகளில் அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வீடுகளை தீவைத்துக் கொளுத்தினர். இதில் வீடுகளிலிருந்த 20 பெண்கள் உள்பட 33 பேர் உடல் கருகி இறந்தனர்.
கொலை, கொலைமுயற்சி, கலவரம், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய வழக்குகள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.