நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் கலவரங்களை பற்றி முன்னால் அமைச்சர் ஐ.கே. ஜடேஜாவை நானாவதி கமிஷன் விசாரனை

M_Id_247019_Jadeja_arrives_at_the_office_of_Nanavati-Mehta_panel_on_Tuesday
மோடி அரசாங்கத்தின் ௨௦௦௨ –ஆம் ஆண்டில் குஜராத் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஐ.கே. ஜடேஜா, 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வகுப்பு வாத வன்முறைகள் பற்றி நானாவதி கமிஷனின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.டி. நானாவதி மற்றும் அக்ஷ்ய மெஹ்தா ஆகியோரால் தொடர்ந்து அரை மணி நேரம் கேள்வி கணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மேலும் பணியில் இருந்து நீக்கப்பெற்ற ஐ.பி. எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டை ௨௦௦௨ ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நரேந்திர மோடியால் அழைப்பு விடுக்கப்பட்ட சந்திப்பு பற்றியும், அதில் அவர் வன்முறையை தூண்டும் வண்ணம் பேசிய உரையாடலை பற்றியும் எழுப்ப பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ஜடேஜா. திரு.சஞ்சீவ் பட்டின் வாக்கு மூலத்து படி ஜடேஜாவும் அந்த சந்திப்பில் பங்கெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலவரத்தின் போது மாநில சுகாதார அமைச்சர் அசோக் பட்டுடன் கட்டு பாட்டு அறையில் ஜடேஜாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையை பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்த ஜடேஜா, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வகுப்பு வாத கலவரங்களை பற்றி விசாரிக்க எனக்கு கமிஷன் அழைப்பு விடுத்து இருந்தது எனவும், அதற்கு சம்மந்தமான சில கேள்விகளை எழுப்பியது எனவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் பி.ஜே.பியில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி அமைத்த  மற்றும் மஹா குஜாராத் ஜனாதா பார்ட்டியின் அமைச்சர் கோர்தான் ஜடாபியா விசாரணைக்கு உட்படுத்தப்பின்னர், நரேந்திர மோடி அரசாங்கத்தில் நானாவதி கமிஷனால் விசாரிக்கப்பட்ட இரண்டாவது அமைச்சர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது