தெஹ்ரான் : இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நிருபிக்கும் வண்ணாமாக கடந்த ஜனவரி மாதம் 2010- ஆம் ஆண்டு தெஹ்ரான் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய மசௌத் அலி முஹம்மதி என்பவரை அவரது சொந்த ஊரான வடக்கு தெஹ்ரானில் வைத்து அலி ஜமாலி பாசி என்பவர் கொலை செய்த வழக்கில், ஈரான் நீதிமன்றத்தில் அலி ஜமாலி ஆஜர் படுத்தப்பட்ட போது, இவர் பல முறை துருக்கி சென்று மொசாத் உளவு துறையை சந்தித்தது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள தனது உளவு துறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் துர்க்மெனிஸ்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அமெரிக்காவின் வற்புறுத்தலால் திறக்கப்பட்டது எனவும், அதனை இஸ்ரேல் டெல் அவிவின் உளவு துறை மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் உளவு துறையின் உண்மை முகத்தை அறியாத தாய்லாந்து, இந்தியா, அர்மேனியா மற்றும் மலேசியாவின் அரசாங்கங்களே இஸ்ரேலின் உளவு துறையை வலுவூட்ட காரணமாக அமைந்து வருகிறது. மேலும் இந்த உளவு மையமானது ஈரானில் மட்டுமல்லாது சிரியா, ஈராக், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் துனிசியாவிலும் டெல் அவிவ் தங்களது குறியை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கு நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்து, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் ஏற்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்வு மற்றும் மறு சீரமைப்பே இதற்கு பின்னால் உள்ள காரணம் என்று தெரிவித்துள்ளனர்.