புது டெல்லி : இந்திய அரசை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், ரத்து செய்ய கோரி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தலைவர், E. M. அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய விலை கடந்த ஆண்டின் விலையை விட பதினொன்று மடங்கு கூடுதல் என்றும் அது கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் இலாபமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு இதில் தனியார் நிறுவனங்களுக்கு கைப்பாவையாகவே செயல் படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள எண்னெய் விலையை அதன் அண்டை நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்ப்போமானால், அங்கு இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது. இதை மதிய அரசு விரைவில் இந்த தனியார் எண்னெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு பாடம் புகட்டுவார்கள், என்றும் E. M. அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கையும் விடுத்தார்.