நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

குஜராத் நீதிமன்றம் 31 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது!

அஹமதாபாத் :  குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு சிறிதளவு நீதி கிடைத்துள்ளது.

சர்தார்புரா நகரத்தில் இருக்கின்ற விஜாபூர் பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற இனக்கலவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 33 முஸ்லிம்கள் உயிரோடு எரித்து
கொலை செய்யப்பட்டனர். இதற்கானவழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 73 நபர்களில் 31 நபர்களை குற்றவாளிகள் எனக்கூறி ஆயுள் தண்டனை வழங்குவதாக கடந்த புதன்கிழமை குஜராத் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இனப்படுகொலையை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் சிறப்பு விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். அது போல அந்த விசாரணைக்குழுவும் தன்னுடைய விசாரணையை மேற்கொண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத்தந்துள்ளது.
குஜராத் கலவரத்தில் உயிர் பிழைத்த ஒரு பெண்மணி நடந்தவைகளை பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது கண்கழங்கினார்.
கொலை, கொலை முயற்ச்சி, கலவரத்தை ஏற்படுத்துதல் போன்ற வழக்குகளின் கீழ் 73 நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 73 நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தும் நீதிமன்றம் 42 நபர்களை விடுதலை செய்தது. அதில் அதில் 31 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.ஆனால் அந்த 31 நபர்களும் ரூபாய் 25,000ற்கு பத்திரம் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளி நாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. மேலும் 11 நபர்கள் மீது எந்த ஆதரமும் இல்லை எனக்கூறி விடுதலை செய்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் 59 கரசேவகர்கள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. (இதில் 59 கரசேவர்கள் கொல்லப்படவில்லை என்றும் இதில் சில பேர் உயிரோடு இன்றும் இருக்கிறார்கள் என்பது பின்னர் வெளியானது). இந்த சம்வத்தை தொடர்ந்து நாடே தலை குனியும் அளவிற்கு முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகள் மாநிலம் முழுவதும் அறங்கேறின. இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்டு அரசாங்கம் மற்றும் காவல்துறையின் அனுமதியுடனே நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

2002ல் நடைபெற்ற கலவரத்தின் போது சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதியான சர்தார்புரா பகுதியில் ஃபாசிஸ கும்பல் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் உயிருக்கு பயந்து தங்களை கொலைகார கும்பலிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இபுராஹிம் ஷேக் என்பவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அந்த ஃபாசிஸ கும்பல் ஈவு இரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி வீட்டை சுற்றி முற்றிலும் தீ வைத்தது. இதில் 22 பெண்கள் உட்பட மொத்தம் 33 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.

ஆயிரணக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இந்த கலரத்தில் முதன் முதலாக சிறிதளவு நீதி கிடைத்திருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை அளித்திருக்கிறது.

ஆனால் இந்த கலவரத்திற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட அம்மாநில முதலைமைச்சர் நரேந்திர மோடி தண்டிக்க்படுவது எப்போது? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களின் நெஞ்சங்களிலும் ஒளித்துக்கொண்டிருக்கிறது