32 வயதான மனித உரிமை போராளியான ஷஹ்லா மசூத், ஆகஸ்ட் 16 அன்று அடையாளம் தெரியாத நபரால் அவரது வீட்டுவாசலில் பட்டப்பகலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
குறிப்பாக இந்த வழக்கில் இதை நாங்கள் தொடர்வோம், இது எங்களுக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் உதவும் என்று நம்புகிறோம் என்று இந்த பேஸ்புக் பக்கத்தை தொடங்கிவைத்த போபால் டிஐஜி ஹேமந்த் பிரியதர்ஷி கூறினார்.
கொல்லப்பட்ட மசூத் இயற்கையை பாதுகாக்கும் அமைப்பில் பணியாற்றிவந்தார்,மேலும் நல்லாட்சியை விரும்புவராகவும், ஆர்டிஐ செயற்பாட்டிலும்,சுற்றுச்சூழல், பெண்ணுரிமை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளான சிறுவர்களின் உரிமைகள் இவற்றுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.
மத்தியபிரதேசத்தின் பல்வேறு சரணாலயங்களில் புலிகள் இறப்பு அதிகரிக்கும் பிரச்சனையில்தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் சேருவதற்காககிளம்பியபோதுதான் கொல்லப்பட்டார்.கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை சிபிஐயால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. சிபிஐயின் போபால் பிரிவு குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாகதுப்பு தருபவருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றுஅறிவித்திருக்கிறது.