நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

அணு ஆயுத தயாரிக்க ஈரான் முயற்சி:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை-ஈரான் மறுப்பு

5680321
வியன்னா : அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணிகளில் ஈரான் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் ஆதாரமாக இருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி(ஐ.எ.இ.எ) அறிக்கை வெளியிட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்களைக்குறித்து கவலை தெரிவிக்கும் இவ்வறிக்கை அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக மட்டும் ஈரான் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறுகிறது.
அணு சக்தி ஏஜன்சியின் அறிக்கை கசிந்து ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.இதனை உறுதிச்செய்யும் விதத்தில் நேற்று ஐ.எ.இ.ஏவின் அறிக்கை வெளியாகியுள்ளது. உறுப்பு நாடுகளிலிருந்து கிடைத்த விபரங்கள், ஐ.ஏ.இ.ஏ சொந்தமாக கண்டறிந்த ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாராக்கிய இந்த அறிக்கையில், ஈரான் ரகசியமாக தற்பொழுதும் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறது.
கிடைத்த தகவல்கள் அனைத்தையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறும் ஐ.எ.இ.எ 2008-09 ஆம் ஆண்டு அணு ஆயுதங்களின் கம்ப்யூட்டர் மாதிரியை சோதனைச்செய்தது கவலையடைய செய்வதாக கூறுகிறது.
அதேவேளையில் ஐ.எ.இ.ஏவின் அறிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது.ஐ.எ.இ.ஏவின் அறிக்கையின் காரணமாக அமைதியான காரணங்களுக்காக அணுசக்தி திட்டப்பணிகளிலிருந்து ஈரானால் பின்வாங்கமுடியாது என அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். ஐ.எ.இ.ஏ அறிக்கை வெளியானபிறகு தென்மேற்கு ஈரானில் ஷஹரேகுர்த் நகரத்தில் மக்களிடையே உரையாற்றுகையில் அஹ்மத் நஜாத் இதனை தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை இந்த அறிக்கை சீர்குலைப்பதாகவும், ராஜதந்திர பரிகாரத்தை சாத்தியமற்றதாக்க இவ்வறிக்கை முயல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அறிக்கையை வெளியிடுவதில் ஐ.எ.இ.ஏ கூறும் காரணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ள ரஷ்யா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுடன் ஈரான் பேச்சு நடத்தவிருக்கவே இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக மீண்டும் தடையை ஏற்படுத்த அமெரிக்காவின் தலைமையில் முயற்சி நடக்கும் வேளையில் அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கைக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அமெரிக்காவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.