அஹ்மதாபாத் : மோடி அரசு சஸ்பெண்ட் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக குற்றம் சாட்டி போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுச்செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.