புதுடெல்லி : இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.