அஹ்மதாபாத் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை சமர்ப்பித்த குஜராத் மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தனது பாதுகாப்பு பொறுப்பை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் நதீம் ஸய்யித் கொல்லப்பட்ட சூழலில் சஞ்சீவ் பட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் குறைகள் இல்லாத பாதுகாப்பை ஏற்பாடு செய்யவேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் பட் கடிதம் எழுதியுள்ளார்.தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என 2011 மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை என பட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.