மினா: சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர்.
அரஃபாவிலும், ஷைத்தானுக்கு கல்லெறியும் ஜம்ராக்களிலும், முஸ்தலிஃபாவிலும் சென்றுவிட்டு சோர்ந்து வரும் பெண்களுக்கு ஓரளவாவது ஆறுதலை தரும் சேவைகளை புரிய முடிந்ததாக விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தின் துணைச் செயலாளர் ஷாஹினா
கஃபூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் அதிகமான சேவைத் தொண்டர்கள் பெண் ஹாஜிகளுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
ஸுகுல் அரபு சாலை, அல் ஜவ்ஹரா சாலை ஆகியவற்றில் கிங் அப்துல்லாஹ் பாலத்திலிருந்து ஜம்ராவுக்கு அருகிலுள்ள இந்திய ஹஜ் மிஷனின் கண்காணிப்பில் கூடாரங்களிலும், தனியார் ஹஜ் குரூப்புகளின் கூடாரங்களிலும் விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தை சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் சென்று பெண் ஹாஜிகளை சந்தித்தனர்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் சார்பாக 1000 சேவைத் தொண்டர்கள் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றியுள்ளனர்