லண்டன் : ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தனர். மேலும் அந்த நகரில் வாழும் மக்களை கேன்சர் நோய்க்கு ஆளாக்கியதுடன் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறையுடனேயே பிறக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.







