நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 14 ஜனவரி, 2012

இந்தியாவை அவமதிக்கும் நிகழ்ச்சி: பி.பி.சி மீது இந்திய ஹைக்கமிஷன் புகார்


லண்டன் : இந்தியாவையும், இந்தியர்களை அவமதிக்கும் பி.பி.சி செய்தி அலைவரிசையின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் இந்திய ஹைக்கமிஷன் சேனல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.

ஜெரமி க்ளார்க்ஸனின் ‘டாப் கியர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஹைக்கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி அலைவரிசை நிபந்தனையின்றி மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் இந்திய ஹைக்கமிஷனின் உயர் அதிகாரி பி.பி.சியிடம் நேரடியாக அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி


புதுடெல்லி : 21 சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஃபேஸ்புக், கூகிள், யாஹு, மைக்ரோஸாஃப்ட் ஆகிய இணையதளங்கள் இதில் அடங்கும்.

டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் முன், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசிய

இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


புதுடெல்லி : தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை


சென்னை : பா.ஜ.கவின் ரதயாத்திரை புகழ் எல்.கே.அத்வானியும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியும் இன்று சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில் பாசிஸ்டுகளின் ஏஜண்டாக செயல்பட்டுவரும் ‘சோ’ ராமசாமியின் துக்ளக் பத்திரிகையின் 43-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் வருகை தருகின்றனர். சிங்கப்பூரில் சிகிட்சை முடிந்து சென்னையில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்தை இருவரும் சந்திப்பார்கள் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி நாடான இஸ்ரேலின் கருவியாக இந்தியா செயல்படக்கூடாது!

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. துரதிஷ்ட வசமாக‌ நம்முடைய அரசு அமெரிக்கா மற்றும் அதனின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் கடுமையான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருகின்ற போராட்டம் குறித்து பத்திரிக்கையில் வந்த செய்திகள்




வியாழன், 12 ஜனவரி, 2012

கடையநல்லூரில் இன்று முதல் ஆட்டு இறைச்சிக்கு தடை!!


கடையநல்லூரில் கடைகளில் விற்கப்படும் ஆட்டு இறைச்சி  பொதுவாக ஓர் இடத்தில வைத்து அறுக்கப்பட்டு அந்தந்த கடை உரிமையாளர்களால்  விற்பனையாகின்றன. இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய  பகுதியான கடையநல்லூரில் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை ஹலாலான முறையில் உண்பதே வழக்கம்.
    


ஆகவே ஆடுகள் அறுக்க கூடிய இடங்களில் ஊர் ஜமாத்தின் சார்பில் ஒருவரை நியமித்து ஆடுகள் ஹலால் முறையில் அறுக்கபட்டு விநியோகிக்க படுகிறதா என்று


முழி பிதுங்கும் சங்கப்பரிவாரங்கள்



வேலியில் மேய்ந்த‌ ஓநாணை எடுத்து எதற்குள்ளோ விட்ட கதையாகிப்போனது சங்கப்பரிவாரங்களின் தற்போதைய நிலை. ஆம்! கர்நாடக மாநிலத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய தேசியக்கொடியை மதிக்காத, அதனை தேசியக்கொடியாக அங்கீகரிக்காத பண்டார பரதேசிகளான சங்கப்பரிவார கும்பல்கள் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றி விட்டு தற்போது ஆப்பசைத்த குரங்காக முழி பிதுங்கி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும்..

சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் 11.01.2012 அன்று மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகலை போற்றும் விதமாகவும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும்,

புதன், 11 ஜனவரி, 2012

நீதியை அடுத்த நஷ்ட ஈடும் மறுக்கப்படுகிறது


ஹைதரபாத் :  போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதியை போன்று தற்போது நஷ்டஈடும் மறுக்கப்பட்டுள்ளது. 
 

பசுபதி பாண்டியனின் படுகொலை! SDPI மாநில தலைவர் கண்டனம் !




நோ மொ ஃபோபியா(No-mo-phobia)


நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம்.

சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை.

ஆந்திராவில் 40 முஸ்லிம் இளைஞர்கள் கைது


ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் நகரில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை தார்மீக(Moral) போலீசாக செயல்பட்டதாகக் கூறி ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட 40 இளைஞர்கள் மீதும் கடுமையான குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதுக்குப் பின் அவர்களை காவல்துறையினர் அவர்களை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர்.

உலக பயங்கரவாதிகளோடு உறவாடும் இந்தியா!


ஜெருசலம் : மத்தியக் கிழக்கில் பயங்கரவாதத்தை விதைத்து ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை அபகரித்து மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கி வரும் இஸ்ரேலுக்கு இந்தியாவின் சைபர் நகரமான பெங்களூரில் தூதரகத்தை திறக்க தாராள மனசுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மனும் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டச்சத்துக் குறைவு:தேசிய அவமானம் – மன்மோகன்


புதுடெல்லி:இந்தியாவில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பது தேசத்திற்கே அவமானம் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றிற்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையை டெல்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் அவர்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

கூடா நட்பு கேடாய் முடியும்


இஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 

உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மத்திய ஆசியாவின் கேன்சர் தான் இஸ்ரேல்.

பு அஸீஸி மாதிரியில் மீண்டும் துனீசியாவில் தற்கொலை


துனீஸ் : ஜனநாயக புரட்சிக்கு காரணமான நடைபாதை காய்கறி வியாபாரி முஹம்மது பு அஸீஸியின் தற்கொலையை போன்று மீண்டும் ஒரு சம்பவம் துனீசியாவில் நிகழ்ந்துள்ளது.

அம்மார் கர்ஸல்லா என்ற 48 வயது நபர் தென்மேற்கு துனீசியாவில் தீவைத்து தற்கொலைச் செய்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் குழுவை சந்திக்க அனுமதிக்காததால் கர்ஸல்லா பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைச் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடுமையான தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ஸல்லா நேற்று மரணமடைந்தார்.
மரண செய்தி வெளியானதை தொடர்ந்து துனீசியாவின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எதிர்ப்பு வலுத்தது.

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை


பிஜாப்பூர் : கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவேண்டும் என கர்நாடாகா மாநிலத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.

முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு(Reservation): குர்ஷிதின் மனைவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதின் மனைவியுமான லூயிஸ் குர்ஷிதிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டில் 9

நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம்



சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில், முதல்வரைப்பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது என்று காரணம் காட்டி நக்கீரன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டிருப்பதும், நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திற்கான மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

திங்கள், 9 ஜனவரி, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்



முஸ்லிம்களுக்கு மாநில அளவில் உள்ள இட ஒதுக்கீடை உயர்த்த கோரியும் ,மத்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்க கோரியும் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் நெல்லை உட்பட தமிழகத்தில் ஐந்து பகுதிகளில் நடைபெற இருக்கிறது .

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம்!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் தேனியில் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கப்பரிவாரங்கள கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணி


கூர்க் (கர்நாடகா) :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தின் கிளை சார்பாக பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சங்கப்பரிவாரங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

protest in Coorg
கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சங்கப்பரிவாரங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முர்ஷிதாபாத்தில் 10 கிராமங்களை பாப்புலர் ஃப்ரண்ட் தத்தெடுத்தது


முர்ஷிதாபாத் : மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பத்து கிராமங்களை சர்வ ஷிக்‌ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தத்தெடுத்ததாக சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் அறிவித்துள்ளார்.

10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் கிட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சியை அவர் துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் தவுலாதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பட்டதாரி மாணவர்களுக்கான இரண்டாவது கட்ட கல்வி உதவித் தொகையை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் நிகழ்ச்சியிலும் இ.எம்.அப்துற்றஹ்மான் கலந்துக் கொண்டார்.

லவ் ஜிஹாத்:இந்த அனுபவம் யாருக்கும் வரக்கூடாது – அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷா


பத்தணம்திட்டா(கேரளா) : ’எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே நன்றி. சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.

லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் ஹிந்து ஜாக்ருதி டாட் காம் செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு

மோடியின் உண்ணாவிரதம் கேலிக்கூத்து – மனித உரிமை ஆர்வலர்கள்


அஹ்மதாபாத்:மோடியின் ‘ஸத்பாவனா’ உண்ணாவிரதத் தொடரின் ஒரு பகுதியாக கோத்ராவில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதம் கேலிக் கூத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி மோடி கோத்ராவில் உண்ணாவிரதமிருக்க திட்டமிட்டுள்ளார்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

அரசியல் மாற்றங்களும் இஸ்லாமியவாதிகளும் புரட்சிக்குப் பிந்திய உணர்வலைகள்!


Islamic World
1924 இல் துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தலைமைத்துவமற்ற சமூகமாகமாறியது. ஏனெனில், றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவில் நிலவிய இஸ்லாமிய கிலாபத் 1924 ஆம் ஆண்டு வரை ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.

மும்பை குண்டுவெடிப்பு:அப்பாவி முஸ்லிம்களை தொடர்ந்து குறிவைக்கும் ஏ.டி.எஸ்


மும்பை : அண்மையில் மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினரால்(ஏ.டி.எஸ்) கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போதிலும் கடந்த ஆண்டும் ஜூலை 13-ஆம் தேதி நடந்து மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலங்கவில்லை.

ஸினாரில் உள்ள தரபங்காவைச் சார்ந்த பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களான கமர் அஸ்லம்(வயது 19), அப்துல் வஹ்ஹாப்(வயது 20) ஆகியோரை ஏ.டி.எஸ் இம்மாதம் முதல் தேதியில் கைது செய்தது. ஆனால் இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போதிலும் தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என மும்பை ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர்:லிலாங்கில் எஸ்.டி.பி.ஐ நடத்திய தேர்தல் பிரச்சாரம்


லிலாங் : சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த தேர்தல் பிரச்சாரக் குழு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மணிப்பூர் லிலாங்  தொகுதியில் போட்டியிடும் முஹம்மத் ஹாலித் தனது பிரச்சாரத்தை துவக்கியது.

இந்த பிரச்சாரத்தில் 3000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். சுமார் காலை 11-மணி அளவில் தொடங்கிய இந்த பிரச்சாரத்தில் 200 இரு சக்கர வாகனங்கள், 30 ஆட்டோ ரிக்க்ஷா  மற்றும் 20-கார்கள் பங்கேற்க இந்த பிரச்சார பேரணி லிலாங் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றது.

இஷ்ரத் ஜஹான் எண்கவுண்டர் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை அன்று குஜராத் உயர் நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவின் படி கடந்த 2004 ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இருக்கின்றது.


இதற்கு முன்பாக இவ்வழக்கை குஜராத் உயர் நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில் இஷ்ரத் ஜஹான் குஜராத் காவல்துறையினரால் போலி எண்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது. தற்போது வி.வி லக்ஷ்மி நாராயணன் தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கிற்கான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு ஒப்படைத்தது.