சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தாஃவா பயிற்சி முகாம் நடைபெற்றது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும். ஆனால் பலருக்கு இது செய்வதற்கு ஆசை இருந்தாலும் தயக்கத்தின் காரணமாக இதனை சரி வர செய்யாதிருப்பார்கள். எவ்வாறு இஸ்லாமிய அழைப்புப்பணியை மேற்கொள்ளவேண்டும் என்ற பயிற்ச்சி வகுப்பு சென்னை இராயபுரத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சில சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.