நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 மார்ச், 2012

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் – உ.பியில் தனித்து ஆட்சி அமைக்கும் முலாயம்


டெல்லி : 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்
இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உத்தரகண்ட்:காங்கிரஸா? பாஜகவா?
உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் காங்கிரஸ் 32 இடங்களிலும் ஆளும் பாஜக 31 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் வென்றுள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க 36 இடங்கள் தேவை.
உத்தரகண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மாயாவதி மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் உதவி தேவை. இதனால் இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.
பஞ்சாப்:அகாலிதளம்-பாஜக கூட்டணி வெற்றி
பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.
ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை என்பதால் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
கோவா:காங்கிரஸ் தோல்வி – பாஜக வெற்றி
கோவாவில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது. 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.
மணிப்பூர்:காங்கிரஸ் வெற்றி
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 44 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 10 இடங்களிலும் வென்றுள்ளன. பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.