நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான ஊடகங்களின் அவதூறுப் பிரச்சாரம்: சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் கண்டனம்!


புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக ஊடகத்துறையின் ஒரு பகுதியினர் திட்டமிட்டு நடத்தி வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
popular front of india
தேசிய அளவில் பிரபலமான தலைவரான செய்யது ஸஹாபுதீன்(முன்னாள் எம்.பி), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத்தின் தலைவர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஜான்.தயாள், லோக் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான பவானி பா.மோகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டுவரும் சமூக இயக்கங்களுக்கு எதிராக ஊடகங்கள் பரப்பிவரும் இது போன்ற அவதூறான பிரச்சாரத்திற்கு எதிராக தங்களது அதிர்ச்சியையும், கண்டனங்களையும் அவர்கள் பதிவுச் செய்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘வலதுசாரி மதவாத இயக்கங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதிச் செயல்களின் மூலம் பரப்பி வரும் விஷக் கருத்துக்கள் தாம் இந்த அவதூறுப் பிரச்சாரம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது:
‘பயோனீர்(The Pioneer) என்ற ஆங்கில நாளேடுதான் இந்தப் போலி பிரச்சாரத்தை துவக்கி வைத்தது. டெல்லி சாணக்கிய புரியில் நடந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காயமடைந்தார்.
இந்த குண்டுவெடிப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் பங்களிப்பு இருக்கின்றதா? என விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், சமீபத்தில் கேரளாவில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுக்குழுவில் இந்திய-இஸ்ரேலிய உறவை கண்டித்து பாப்புலர் ஃப்ர்ண்டால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் இதன் பின்னணி எனவும் எழுதியுள்ளது பயோனீர்.
பயோனீர் சங்க்பரிவாரத்தின் அறிவிக்கப்படாத பத்திரிகை என்பதை அனைவரும் அறிவர். பின்னர் அதே கதை சில சிறிய மாற்றங்களுடன் நியூ சண்டே எக்ஸ்பிரஸ், டைனிக் ஜாக்ரன், நவ் பாரத் டைம்ஸ், இன்குலாப், டெக்கான் க்ரோனிக்கிள் மற்றும் சி.என்.என்-ஐ.பி.என் ஆகிய ஊடகங்களில் வெளிவந்ததன் மூலம் யாரோ சிலர் டெல்லியில் இருந்து பாப்புலர் ஃப்ர்ண்டிற்கு எதிராக வேலை செய்துகொண்டும், அப்பாவி வாசகர்கள் பாப்புலர் ஃப்ரண்டை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவும் சதி செய்கின்றனர்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் பாதையில் வேண்டுமென்றே திட்டமிட்டு தடைக்கற்களை ஏற்படுத்தி வருவதை இதன் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.
உலகின் நம்பர் ஒன் தீவிராத நாடாகவும், பல நாடுகளுக்கு எதிராக சூழ்ச்சி மற்றும் குழப்பம் செய்து வரும் நாடான இஸ்ரேலுடன் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் உறவை பல அமைப்புகள் கண்டித்துள்ளன. அதேப் போன்று இஸ்ரேலின் ஏஜண்டுகள் பல நாடுகளில் மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே!
அண்மையில் கேரள உயர்நீதிமன்றம் 3 இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற போலியான பிரச்சாரங்களால் பொதுமக்கள் அச்சமடைந்து, உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இஸ்ரேலிய ஏஜண்டுகள் ஊடகங்களை கூட பணம் கொடுத்து வாங்கும் திறன் படைத்தவர்கள். அதன் ஒரு பகுதியாக கூட இந்த பிரச்சாரங்கள் இருக்கலாம். மக்கள் இதைப்போன்ற அவதூறுப் பிரச்சாரங்களை கண்டு ஏமாந்துவிடக் கூடாது. ஜனநாயக ரீதியாக சட்டப்படி போராடி வரும் இயக்கங்களுக்கு எதிராக இது போன்ற அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.’ இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.