நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 4 மார்ச், 2012

பிரதமருக்கு ஜால்ரா போடும் ஆர்.எஸ்.எஸ்!


புதுடெல்லி :  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துக்களுக்கு ஜால்ரா போடும் வேலையை துவக்கியுள்ளது.
1591160
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில் எழுதியுள்ள தலையங்கத்தில், கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியதற்கு பாராட்டை தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் வழக்கத்துக்கு மாறாக, பகிரங்கமாகவும் உறுதியாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏடு பெருமிதம் கொள்கிறது.
வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் 75% கிறிஸ்தவ அமைப்புகள் என்றும் சமூக சேவைக்காக என்ற பெயரில் நிதியுதவி பெற்று அதை மத மாற்றத்துக்காகவே அவை பயன்படுத்துகின்றன என்றும் அந்தத் தலையங்கம் கூறுகிறது.
300 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் கூடங்குளத்துக்கு அன்றாடம் லாரிகளில் ஏராளமான மக்கள் அழைத்து வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்படுவதாக அது சுட்டிக்காட்டுகிறது.
மீனவர்களால் தொடர்ந்து 5 மாதங்களாக எப்படி கடலுக்குள் செல்ல முடியாமல் குடும்பத்தை நடத்த முடிகிறது என்று கேட்கும் தலையங்கம், கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு வெளியிலிருந்து யாரோ பண உதவி செய்யாமல் இப்படி கிளர்ச்சி நடத்த முடியாது என்கிறது.
இவ்வாறு சந்தடிசாக்கில் சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் ஏட்டின் செயல் ‘சாத்தான் வேதம் ஓதுவதை’ போன்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் வெளிநாடு வாழ் ஹிந்துத்துவாவாதிகளுக்கான முன்னணி அமைப்பானIDRF  என்று அழைக்கப்படும் இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF)  2000-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலராகும்.‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. இவ்வமைப்பு சார்பாக திரட்டப்படும் பணம் இந்தியாவில் சங்க்பரிவாரின் கீழ் செயல்படும் கீழ்கண்ட ஒன்பது அமைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது:
விகார் பாரதி (பீகார்)
சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)
சேவா பாரதி (டெல்லி)
ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)
வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)
கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)
ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)
1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. இதைப்போல வெளிநாடுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ் நிதி திரட்டுவது தொடர்பான ஏராளமான உறுதிச்செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மை அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து மத மாற்றத்திற்கு பணம் வருகிறது என்ற லாவணியை மீண்டும் பாட ஆரம்பித்துள்ளது. அடிக்கடி ஆயிரக்கணக்கானோரை மாநாடுகள் நடத்துவது, சிறுபான்மையினரை அச்சுறுத்த அணிவகுப்புக்களை நடத்துவது, உழைக்காமல் திருமணம் முடிக்காமல் ஆர்.எஸ்.எஸ்ஸின் விஷ விதைகளை தூவி வரும் ஆயிரக்கணக்கான முழு நேர ஊழியர்கள், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் செலவழிக்க ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? ஆர்.எஸ்.எஸ்ஸின் நிதி ஆதாரத்தை ஆழமாக ஆராய்ந்தால் அதிர்ச்சி தரும் மர்மங்கள்தாம் வெளியாகும்.