நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 9 மார்ச், 2012

இஸ்ரேலின் ஆதிக்கம் இந்தியாவில் துவக்கம்!

அன்மையில் டில்லியிலுள்ள இஸ்ரேலின் தூதரகத்தில் குண்டு வெடித்தது. இதில் காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக அரங்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பகளில் அதிநவீன தொழி நுட்பத்துடன் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்புகள் அனைத்துமே இஸ்ரேலுடைய பிண்ணனியில் நடந்துள்ளன. இதை புலன் விசாரணை செய்யும் முன்பே இந்திய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக ஒரு சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து செய்தி வெளியிட்டன.

காவல்துறையும் இந்தியாவின் முஸ்லிம்களை, ஈரானைச் சேர்ந்தவர்கள் இதை செய்திருபார்கள் என்ற யூகத்தில், டெல்லி ஜாமியா நகரில் அதிரடி சோதனை என்ற பெயரில் 6 முஸ்லிம் இளைஞர்களை பிடித்துக் கொண்டு அவர்களை ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றனர்.

அடிமைகளாக அடங்கிக் கிடந்த நமது சமூகம் அடக்குமுறைக்கு எதிராக கொதித்து எழுந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு சான்றாக ரேஷன் கார்டுகளை காண்பித்தும் போலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது என்று பொது மக்கள் 3 காவல் துறை அதிகாரிகளை சிறைபிடித்தனர்.

அதிர்ச்சியடைந்த போலீஸார் வானத்தை நோக்கி சுட்டனர். பிறகு அதிகாரிகளை மீட்டதை அடுத்து உயர் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்திய பின் 6 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சமீபத்தில் ஈரானுக்கு எதிராக போருக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வரக்கூடிய இந்த சூழல் மற்றும் இந்த குண்டு வெடிப்பினை காரணம் காட்டி இஸ்ரேலின் சிறப்பு உளவுப்பிரிவு இந்தியாவிற்கு வர உள்ளது. ஈரானுடனான உறவை துண்டிக்க அமெரிக்கா வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த குண்டுவெடிப்பின் பின்னனி இஸ்ரேல்தான் என்று நடுநிலையாளர்களின் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.