அஸ்ஸலாமு அலைக்கும்,
சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் மச்சானின் சகோதரர் சங்கரன்கோவில் ஊரைச் சேர்ந்த சலீம், அவர்கள் கடந்த வியாழக்கிழமை, ரியாத்திலுள்ள ஹையல் வஜாரத் என்ற ஏரியாவில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பொழுது, விபத்துக்குள்ளாகி, அகால மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தன் மனைவி/மக்களுக்காக, பொருட்கள் கொடுப்பதற்காக, ஊர்க்காரரைப் பார்க்கச் சென்ற பொழுது தான், இந்த விபத்து நடந்திருக்கிறது. யாரிடமும் சொல்லி விட்டு போகாததால், எங்கு சென்றார் என்ற தகவல் தெரியாமலேயே, இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை தான் தகவல் தெரிந்திருக்கிறது.அவர் வேலை பார்த்த கம்பெனி ரியாத்திலுள்ள அப்துல்ரஹ்மான் அல்கொஸைபி ஆகும்
அன்னாருடைய ஜனாஜா தொழுகை, நேற்று அஸர் தொழுகைக்குப்பின் (ரியாத் எக்சிட் 15 )அல்ராஃஜி பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சுவனத்தில் புகுத்த வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துஆ செய்வோம்.
வஸ்ஸலாம்