நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 9 மார்ச், 2012

புரோக்கர் வேலை பார்க்கும் "துக்ளக் சோ"

நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் பா.ஜ.க அழுத்தமாகவும், திரும்பத்திரும்ப சொல்லக்கூடியது என்னவென்றால் தாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றோம் என்பதுதான். இந்தக்கூட்டணி இயற்க்கையானது என்றும் இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் துணை பிரதமர் செல்வி ஜெயலலிதா தான் என்றெல்லாம் உசுப்பேத்தி விடுகின்றனர். 



இச்சமயத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் மத்தியில் புரோக்கர் வேலையும் செய்து வரும் துக்ளக் சோ மட்டும் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று பெரிய ஐஸ் வைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா செய்த ஊழல் தொடர்பான வழக்குகளை தற்போது பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தில் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஒரு ஆச்சாரியார் தான். இவரை கர்நாடக பாஜக அரசு கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமித்தது.

கடந்த 08.02.2012 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைப்பற்றி ஆங்கில நாளேட்டிற்கும் இவர் அளித்த பேட்டியில் "ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது, சொத்து குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்ற பதவியே எனக்கு போதும். அந்த வழக்கினை நேரமையாக செய்து முடிப்பேன்" என்று சூளூரைத்துள்ளார்.

அதாவது அரசின் தலைமை வழக்கறிஞர் என்ற பதவியை இலஞ்சமாக கொடுத்து விட்டு அதற்கு பதிலாக சொத்து குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பதவியை இராஜினாமா செய்யும் படி கர்நாடக பாஜக அரசு இவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. ஆனால் நேர்மையான இந்த ஆச்சாரியார் வழக்கறிஞர் இந்த மனிமகுடம் தேவையில்லை என்று தூக்கி எறிந்துவிட்டார். ஜெயலலிதாவிற்காக பாஜகவிடம் தூதுசென்றவர் யார் என்றால் மிஸ்டர் கிளீன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் துக்ளக் சோ தான் புரோக்கர் வேலை செய்தவர் ஆவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு, மனிதர்களின் எதிரிகளான ஃபாசிஸ கும்பலின் பாஜகவோடு கூட்டணி வைத்தால் பெருத்த ஏமாற்றத்தை மக்கள் வழங்குவார்கள். அதற்குண்டான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.