நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 மார்ச், 2012

பிச்சைக்காரர்களின் கால்களை கழுகி தனது தவறுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிராயசித்தம் தேடவேண்டும்


அயோத்தியா : கோயிலில் நடந்த சடங்கு ஒன்றில் தனது கால்களை பழங்குடியின பெண்களை கொண்டு கழுக வைத்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் செயலுக்கு சன்னியாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராம் ஜன்கி கோயிலில் நடந்த சடங்கில் இந்த அவமதிப்பு சம்பவம் நடந்துள்ளது.
பழங்குடி பெண்களை இழிவுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் செயல் பெண்களை இழிவுப்படுத்துவதும், ஹிந்து கொள்கைகளுக்கு எதிரானதுமாகும் என்று அயோத்தியைச் சார்ந்த சன்னியாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அஸ்ஸாம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த பழங்குடியின பெண்களுக்கு ஆயுத பயிற்சி முகாமை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இந்த முகாம் நடைபெறும் வேளையில்தான் இச்சடங்கு நடந்தது. அப்போழுது மோகன் பாகவத் பழங்குடியின பெண்களை கொண்டு தனது கால்களை கழுகினார். இச்சம்பவம் நடைபெறும் வேளையில் வி.ஹெச்.பி தீவிரவாத அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா ஆகியோரும் உடனிருந்தனர். கால்களை கழுகியது கோத்ர ஆச்சாரம் என்று ஆர்.எஸ்.எஸ் விளக்கமளிக்கிறது.
ஆனால், இத்தகையதொரு ஆச்சாரத்தை(சடங்கை) கேள்விப்பட்டது இல்லை என்று அயோத்தியில் வைகுண்ட் பவனில் ஆச்சார்யா புருஷோத்தமாச்சாரி குற்றம் சாட்டியுள்ளார். தேவர்களின்(?) சபையில் மட்டுமே நடந்து வந்த சடங்காகும். இது கலியுகத்தில் மனிதர்கள் செய்வது தெய்வ நிந்தனை என்று அவர் கூறினார்.
இதனை விட பெரிய பாவம் வேறு ஒன்றுமில்லை என்றும், பெண்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் கபடமான அணுகுமுறைதான் இச்சம்பவம் என்று அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் ஞான் தாஸ் கூறியுள்ளார். வேத கிரந்தங்கள் தேவதைகளாக போற்றும் பெண்களை அவமானப்படுத்தியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
அயோத்தியில் பிச்சைக்காரர்களின் கால்களை கழுகி தனது தவறுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிராயசித்தம் தேடவேண்டும் என்று ராஜ்கோபால் கோயில் புரோகிதர் கவுசல் கிஷோர் சரண் கூறியுள்ளார்.