கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும்.
கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
- உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
- எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
- கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
- ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.