நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 8 மார்ச், 2012

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி

சென்னை :  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக  மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.


தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஒவ்வொரு மதுக்கடைகளிலும் எழுதி வைத்துவிட்டு அதை அரசாங்கமே நடத்தும் அவல நிலை நமது இந்தியாவில் மட்டுமே காண இயலும். சமூகத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மதுவிற்கு அங்கீகாரம் அழித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மதுவை அருந்திவிட்டு தன்னிலை உணராமல் சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் அவலங்களை நம்மால் காண முடிகிறது. அச்சாலை வழியாக செல்லும் பெண்களுக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது என்பதற்கான மாற்று கருத்து யாருக்கும் இருக்கவியலாது.

அதே போன்று இந்தியாவில் பெண்களுக்கென்று தனி கவுரவமும், மரியாதையும் எப்போதுமே இருக்கும். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று போற்றி புகழ்ந்து கொண்டிருந்த நமது தேசத்தில் ஆபாசம் என்ற ஒழுக்கக்கேடு புகுந்து சமூகத்தை சீரழித்து வருகிறது. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை அதிவேகமாக பரவி வருகிறது. எனவே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மது மற்றும் ஆபாசத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உலக மகளிர் தினமான மார்ச்-8ஐ முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் ஹெச். ஆயிஷா ஹமீது அவர்கள் "மது மற்றும் ஆபாசம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட N.W.F-ன் மாநில துணைத்தலைவி எம். நபிஸாபானு "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக சென்னை மாவட்ட செயலாளர் எஸ். அஹமது மல்லிகா நன்றியுரை நிகழ்த்தினார்.  இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.