பெரம்பலூர் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் மாபெரும் பெண்கள் விழுப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
லெப்பைக்குடிகாடு MGM கோல்டன் மஹாலில் மார்ச் 3 தேதி மாலை 3:15 மணியளவில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் ஆ.மெகராஜ் பேகம் ஆலிமா தலையுரையாற்றினார். NWF இன் மாநில தலைவர் A. பாத்திமா ஆலிமா மற்றும் மாநில செயலாளர் ரஜியா பானு ஆலிமா ஆகியோர் பெண்கள் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.