நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 4 மார்ச், 2012

லிபியாவில் இஃவான்களின் அரசியல் கட்சி உதயம்!


திரிபோலி : 60 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் கட்சி உதயமாகியுள்ளது. ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி என்று பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் நோக்கம் நாட்டின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் முஹம்மது அய்ர் தெரிவித்துள்ளார்.
Muslim Brotherhood forms political party in Libya
கட்சி பிரகடனத்திற்காக திரிபோலியில் நடந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1400க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர். 18 நகரங்களில் கட்சி செயல்படுவதாக அய்ர் கூறினார்.
முஅம்மர் கத்தாஃபியை ஆட்சியில் இருந்து வெளியேற்றிய உள்நாட்டுப் போரில் அதிக இழப்புகளை சந்தித்த மிஸ்ரத்தாவைச் சார்ந்த முஹம்மது ஸொவான் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2006-ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் கத்தாஃபியால் சிறையில் அடைக்கப்பட்ட ஸொவான் ஒரு ஹோட்டலின் மேனேஜராக பணியாற்றுகிறார்.
1949-ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் லிபியாவில் செயல்பட்ட போதிலும் கத்தாஃபியின் அரசு அவ்வியக்கத்தின் தலைவர்களை சிறையில் அடைக்கவோ, கொலைச் செய்யவோ, நாடுகடத்தவோ செய்துள்ளது. கத்தாஃபிக்கு எதிராக போராடிய ஏராளமான எதிர்ப்பாளர்களின் தலைவர்களுடைய ஆசிர்வாதத்துடன் இக்கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் இடைக்கால ஆட்சியை நிர்வகிக்கும் என்.டி.சியை சார்ந்த எவரும் இக்கட்சியில் இல்லை.
கத்தாஃபி யுகத்திற்கு பிறகு அமைப்பின் ஏராளமான தலைவர்கள் லிபியாவுக்கு திரும்பியுள்ளது அதன் உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. போரால் சீர்குலைந்துள்ள லிபியாவில் உதவிகள் மற்றும் சமூக சேவைகளில் இஃவானுல் முஸ்லிமீன் கவனம் செலுத்தி வருகிறது.
இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையிலான நீதியும், வளர்ச்சியும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதுதான் கட்சியின் செயல் திட்டங்களில் ஒன்று என அய்ர் கூறியுள்ளார்.