நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 8 மார்ச், 2012

ஷெர்ஷா சூரி: இந்திய நிர்வாகவியன் தந்தை


இந்திய நிர்வாகவியன் தந்தை:  இந்திய ரூபாயைநிலப் பட்டாவை அறிமுகம் செய்தவர்!

ஷெர்ஷா சூரி. மொகலாய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்காலத்துக்கிடையே தோன்றிய ஓர் அற்புதமான இடைச்செருகல் (INTEREGNUM). இன்றைய இந்திய நிர்வாகவியலின் தன்மைகளுக்கு இவரே முன்னோடி எனலாம்.

நாம் இன்று செலாவணியாகப் பயன்படுத்தும் ரூபாயை அறிமுகம் செய்தவர் இவரே. ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் அதுதான் உண்மை. மதிப்பில் மாற்றமிருந்தாலும் இன்றுவரை அவர் அறிமுகப்படுத்திய "ருபையா'தான் ரூபாயாக உலவி வருகிறது. அதுமட்டுமல்ல உங்களது வீட்டுப் பெரியவர்கள் "நிலப்பட்டா' என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தி இருப்பதை கேட்டிருப்பீர்கள். அந்த பட்டா முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதும் ஷெர்ஷாதான். அதாவது உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படையில், விவசாயிகளின் பெயரில் அவர்களது நிலம் அரசிடம் பதிவு பெற்றிருக்கும்.

பத்திரிகைகளில் ஆளுநர் என்ற வார்த்தையை பார்த்திருப்பீர்கள். ஷெர்ஷாவுக்கு முந்தைய மன்னர்கள்கூட தங்களது பிரதேசங்களை ஆள, ஆளுநர்களை நியமித்திருந்தனர். ஆனால் ஷெர்ஷா உருவாக்கிய ஆளுநருக்கான வரையறைகள்தான் இன்றுவரை பல்வேறு பரிணாமங்களுடன் நீடித்து நிற்கிறது. ஆம். இவருக்கு முன் ராணுவத் தளபதிகளை ஆளுநர்களாக நியமிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் ஷெர்ஷாதான் ராணுவச் சேவையையும், சிவில் நிர்வாகத்தையும் தனித்தனியாகப் பிரித்து நிர்வாகவியலை முறைப் படுத்தினார்.

 "சராய்' எனப்படும் வழிப் பயண ஓய்விடங்களை உருவாக்கினார். இவற்றை அஞ்சல் நிலையங்களாகவும் பின்னர் பயன்படுத்தினார். இவருடைய ஆட்சிக் காலத்தில் வயதான மூதாட்டி கூடை நிறைய தங்கத்துடன் காட்டு வழியில் தனியாகச் செல்லலாம் என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்புடன் இருந்தது. இவ்வளவு சாதனைகளையும் இவர் ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளிலேயே சாதித்துக் காட்டினார். அதுதான் ஷெர்ஷா. ஹுமாயுனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் இவர்.