நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 8 மார்ச், 2012

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்

புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 
கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும் அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம் புறம் தள்ளிவிட்டு மக்கள் நடுநிலையாக இருந்து வாக்களித்துள்ளார்கள்.


சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் அது திரட்டியதால் தான் என அரசியல் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசத்தின் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் ஒரு கட்சி ஆட்சியமைக்க முடியாது என்ற வலுவான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சியை இழந்த மாயவதி கூறும்போது "முஸ்லிம்களின் வாக்குகளே சமாஜ்வாதி கட்ச்யினருக்கு வெற்றியை கொடுத்துள்ளது" எனக்கூறினார்.

உத்திரபிரதேச முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளின் சக்திகளை சரியாக புரிந்து கொண்டனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்குவோம் என்ற காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் புரக்கணித்துவிட்டனர். இதனால் வரை காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டே வருகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத்தீரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இதனாலேயே காங்கிரஸை முஸ்லிம்கள் புரக்கணித்துவிட்டனர்.

முஸ்லிம்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி இதனை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். சமாஜ்வாதிகட்சி எதிர்கொள்ளவிருக்கும் முதல் சோதனை தன்னுடைய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமளிப்பதில் இருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக வாக்களித்திருக்கின்றனர். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் சமூகத்தி நிலையை உயர்த்துவதற்கும் அவர்களுடைய வறுமையை போக்கும்விதத்தில் இராஜேந்திர சர்ச்சார் கமிஷன் பரிந்துரை செய்ததின் படி இடஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தரவேண்டும். உத்திரபிரதேச முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மற்றொரு முக்கிய கோரிக்கை என்னவெனில் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுதான்.

எனவே தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி மாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்வதோடு தேர்தலின் வெற்றிக்காக பணியாற்றிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களுக்கும் அதன் தொண்டர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.