புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க உயர்மட்ட அளவில் தலையீடு ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீது வழக்கின் விசாரணை திரும்பியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சி.பி.ஐ அதிகாரி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். ராஜேந்தர் குமாருக்கு போலி என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக தகவல் அளித்த முன்னாள் சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினரும், தற்போது சி.பி.ஐ புலனாய்வுக் குழுவின் உதவியாளருமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவை சி.பி.ஐ புலனாய்வுக் குழுவில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
ராஜேந்தர் குமாரை சி.பி.ஐ அழைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து ஐ.பி தலைவர் ஆசிஃப் இப்ராஹீம் பிரதமரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
NOV 2013
சனி, 15 ஜூன், 2013
திங்கள், 10 ஜூன், 2013
காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி கைது!: போலீஸின் பொய் மூட்டைகளை தோலுரித்துக் காட்டும் நிமேஷ் கமிஷன் அறிக்கை!
உத்தரபிரதேச
மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில்
தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி, காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி
ஆகியோரை எஸ்.டி.எஃப் (ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்) கைது செய்தது.இக்கைது
சம்பவத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் நிமேஷ்
கமிஷனின் அறிக்கை வெளியாகியுள்ளது.காலித் முஜாஹிதையும், தாரிக்
காஸ்மியையும் பொய் வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்று நேற்று முன் தினம் உ.பி மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன் கூறுகிறது. நிமேஷ் கமிஷனின் அறிக்கை
அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ஃபைஸாபாத்,
லக்னோ, கோரக்பூர் ஆகிய இடங்களில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த
குண்டுவெடிப்புகளில் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மிக்கு
தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி பாரபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து கைது
செய்ததாக எஸ்.டி.எஃப் கூறியது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை
கைப்பற்றியதாகவும் எஸ்.டி.எஃப் தெரிவித்தது. ஆனால், கைது செய்ததாக
கூறப்படும் தேதிக்கு முன்பே இருவரையும் எஸ்.டி.எஃப் காவலில் எடுத்ததாக
நிமேஷ் கமிஷன் கண்டறிந்தள்ளது.
ஞாயிறு, 9 ஜூன், 2013
தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO)

நெல்லை மேற்கு
மாவட்டம் தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்"
(SCHOOL CHALO) "தேசீய விழிபுணர்வு பிரச்சாரத்தின் நிகழ்ச்சியாக 1,00,000
லட்சம் கல்வி
உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 07 அன்று மாலை 4.30 மணிக்கு தென்காசி, காட்டு பாவா நடுநிலை பள்ளியில் வைத்து
பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா-வின் தென்காசி நகர தலைவர் P.
முகம்மது தாரிக் அவர்கள் தலைமையில் கல்வி உபகரணங்கள்
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாழன், 6 ஜூன், 2013
கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா சட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைதுச்
செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது
மோக்கா(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்
கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது. மக்களிடமிருந்து
கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ போலவே மோக்கா(MCOCA)
சட்டமும் ஜனநாயக விரோதமானதாகும்.
கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு : டி.எஸ்.பி சந்திரபால் சஸ்பெண்ட்
நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம்
ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால்
அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO).
என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால்,
இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங்,
டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை
அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி
செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது
துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 2 ஜூன், 2013
வெள்ளி, 31 மே, 2013
கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த UAPA விற்கு எதிரான மக்களின் எழுச்சி!
திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013)
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த
யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின்
இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான
மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும்
நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும்
வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச்
சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப்
மவ்லவி தலைமை வகித்திருந்தார்.
செவ்வாய், 19 மார்ச், 2013
மாணவர் போராட்டத்தை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம். மத்திய அரசுக்கு தி.மு.க ஆதரவு வாபஸ் வரவேற்கத்தக்கது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
இன்று
சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு மாநில தலைவர்
கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்
பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஈழத்தமிழர்
பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின்
உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிய காங்கிரஸின் காவி அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலக கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
ஞாயிறு, 17 மார்ச், 2013
வெள்ளி, 15 மார்ச், 2013
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிக்கிறது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம் நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.
வியாழன், 14 மார்ச், 2013
சிங்கள அரசை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஞாயிறு, 10 மார்ச், 2013
மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கடையநல்லூர் :- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின்
பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற
முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம்,பேரணி,கருத்தரங் கம், மற்றும் கட்டுரைபோட்டிகள்
நடந்தன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் “நேஷனல்
உமன்ஸ் ஃப்ரண்ட்” சார்பாக மார்ச் 10,2013 அன்று
கடையநல்லூர் பேட்டை காதர் மைதின் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் கருத்தரங் கம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு-புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சி :- திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக்
பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன்
முடிவடைந்தது.
சனி, 9 மார்ச், 2013
இலங்கை போர் குற்றவாளிகளை விசாரணையின் முன் நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தீர்மானம்!
புது டெல்லி :- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரத்திற்கு இச்செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியது.
தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் ஏழை மற்றும் சட்ட பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கம் இதனை பயன்படுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருப்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டியது. சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு செயற்குழு கோரிக்கை வைத்தது.
வெள்ளி, 8 மார்ச், 2013
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய
ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம்
முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட
பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி
கொடுத்துள்ளது.
வியாழன், 7 மார்ச், 2013
குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்! – பிரஸ் கவுன்சில் தலைவர்
டெல்லி :- நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!
புதுடெல்லி:- பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
சோவியத் யூனியன் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய உலக ஒழுங்குமுறை என்ற செல்லப் பெயரிட்டு அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளை திட உறுதியுடன் எதிர்த்த சாவேஸ் 3-ஆம் உலக நாடுகளின் தோழன் ஆவார்.
புதன், 6 மார்ச், 2013
ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!
புதுடெல்லி :- ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சக்திப்படுத்துதல் சாத்தியமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
புதுடெல்லி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடுச் செய்த ஒன்று கூடல்(get-together) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாக ஏகபோக குத்தகைகளுக்காக நாட்டின் செல்வம் செலவிடப்படுவதை எதிர்த்து போராடுவது கட்டாயம் என்று துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா கூறினார்.
பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!
திருச்சி:- ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்
மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவிகள் சாதனை
வடகரை :- நாட்டின் 64 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரதியார் நினைவு விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் குங்ஃபு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 722 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பண்பொழி செயிண்ட் ஜோசப் மேல்நிலை பள்ளியின் சார்பில் வடகரையை சார்ந்த சகோதரிகள் ரிஷிகா மற்றம் ஷபானா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இருவரும் சிற வயதிலிருந்தே கராத்தே, குங்ஃபு, டேக்வோண்டா போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை மாறிமாறி தக்க வைத்து வருகின்றனர்.
செவ்வாய், 5 மார்ச், 2013
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி & பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய புனித ஹஜ் பயண பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம் : பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக “ஹஜ் மேளா”வை அரசு நடத்துகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹஜ் மேளா நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பங்கேற்று, உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.
இதனை முன்னிட்டு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு கோரிக்கை.
02-03-2013 அன்று செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மேற்கு
மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
அரசு சம்மந்தப்பட்ட மாவட்ட ரீதியிலான அத்தியாவசிய
சனி, 2 மார்ச், 2013
கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் .
![]() |
கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் நேற்று(01.03.2013) கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
|
புதுவை சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!
புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.
மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் சார்பில்
காஞ்சி காமகோடியின் வெறிப் பேச்சு!
திருச்சி:- பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயரால் நாடகமாடிய சங்கரராமன் கொலைக் குற்றவாளியான காஞ்சி காமகோடி சங்கரச்சாரியார் தனது உளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.
ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் ராமர்கோயிலை கட்டமுடியும் என்று நேற்று திருச்சியில் துவங்கிய ஹிந்துத்துவா துறவியர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.
வெள்ளி, 1 மார்ச், 2013
ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?
புதுடெல்லி:- பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியதுதான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச். தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.
பூரண மதுவிலக்கு : வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்!எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பங்கேற்பு!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது.
தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது. மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

வி.களத்தூரில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையில் அடைப்பு :சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாபெரும் தர்ணா போராட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் மற்றும் மாநில நிர்வாகிகள் 28.02.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மக்களை சந்தித்து பேசினார்கள் .
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது :" கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

காஷ்மீரில் போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில், கடந்த மாதம் 9ஆம் தேதி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையிலே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வியாழன், 28 பிப்ரவரி, 2013
தமிழகத்தை ஆள்வது அரசு துறையா?உளவு துறையா?ஓட்டுப்போட்ட மக்களுக்கு சந்தேகம்- பாப்புலர் ஃப்ரண்ட்
சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.

ஆனால், இப்படிப்பட்ட அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையிலும் காவல்துறையின் ஒருவிதமான மக்கள் அடக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அது முஸ்லிம்கள், தலித்துகள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கின்றது. ஒருவேளை இச்செயல் முதல்வர் அவர்களின் பார்வைக்கு உளவுத்துறையால் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டதா அல்லது இவ்விஷயங்கள் என்ன மாதிரியாக உளவுத்துறையால் முதல்வரிடம் தெரியப்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியவில்லை.
நடுத்தர ஏழை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-எஸ்.டி.பி.ஐ
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்திய நாட்டின் 82 வது பொது பட்ஜெட்டினை 8 வது முறையாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ளார். இதில் நடுத்தர, ஏழை மக்களை வாட்டி வதைக்கும் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பட்ஜெட்டின் முன்னுரையின் போது, நிதியமைச்சர் அன்னிய முதலீடின்றி இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமாகாது என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்ஜெட் அந்நிய முதலீட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இதனால் இந்திய வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இது அபாயகரமானது, நாட்டின் நலனுக்கே எதிரானது.

திங்கள், 25 பிப்ரவரி, 2013
குண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் வேட்டை!
ஹைதராபாத்:- ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 2 நாட்கள் பல்லைக் கடித்துக்கொண்டு கழித்த போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடத் துவங்கியுள்ளது. பல இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 5க்கும் அதிகமான இளைஞர்களை விசாரணை என்று போலியாக கூறி பிடித்துச் சென்றுள்ளனர். இவர்களில் பலரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று தெரிந்த பின்னர் அரசு இவர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலைச் செய்தது.
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
பயங்கரவாதியாக செயல்பட்ட IPS அதிகாரி!
பிப் 24: கடந்த 2004ல் மும்பையை சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக், ஜவஹர், அம்ஜத் அலி உள்ளிட்ட 4 அப்பாவிகளை மோடியை கொல்ல வந்தனர் என்று சொல்லி மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் சுட்டு கொன்றது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்
ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர்
குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர். 83 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும்
கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .
இறந்த பதினைந்து அப்பாவிகளின்
குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள்
விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள்
மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன.
இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை
முறியடிக்க வேண்டும் .
பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை"
தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013
ஷிண்டேவின் முரண்பட்ட கருத்துகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் பி.ஜே.பி
குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து பின்வாங்கும் விதமாக
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் “சிந்தன் சிபிர் கூட்டத்
தொடரில்” கருத்துக்களை வெளியிட்டிருப்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
வன்மையாக கண்டிக்கிறது.
மாலேகான் தொடங்கி சம்ஜவ்தா குண்டுவெடிப்புகள் வரை நடத்தியவர்கள் குறித்த
உண்மைகளை வெளியிடுவதற்கு இன்னும் பொருத்தமான வார்த்தைகளை வேண்டுமானால்
பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினாலும்
நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைவதற்கும், கொல்லப்படுவதற்கும் காரணமான
இக்கொடூரகுற்றங்களுக்கு பின்னால் ஹிந்துத்துவவாதிகளின் கைகள் இருப்பதனை
மறைக்க இயலாது .
திங்கள், 18 பிப்ரவரி, 2013
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்
டெல்லி :- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .
அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி
புதன், 30 ஜனவரி, 2013
பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை தடை செய்! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!
சென்னை: நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் நேற்று (ஜனரி-30) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.
விஸ்வரூபத்துக்கு மீண்டும் தடை - ஐகோர்ட் அதிரடி
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு தடை விதித்துள்ளது.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.
இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.
செவ்வாய், 29 ஜனவரி, 2013
யாரு உண்மையான தீவிரவாதி?
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!
- என்று கூறுகின்றன.
இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,
திங்கள், 28 ஜனவரி, 2013
முஸ்லிம்களின் உணர்வுகளை நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்!
கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படதுறையினரும் சமூக ஆர்வலர்களும் பல கருத்துக்களை வெளியிட்டனர். பல கருத்துக்கள் ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் வெளியிட்டனர்.
திரைப்படத்துறையில் கம்ல்ஹாசன் அவர்கல் பல்வேறு புதுமைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் ஏற்படுத்திவரும் நிலையில், விஸ்வரூபம் போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் திரைப்படம் தடைகளையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கின்றோம்.
வியாழன், 25 அக்டோபர், 2012
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் SDPI 50 தொகுதிகளில் தனித்து போட்டி
எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக மாநில செயற்குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார்.
மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















.jpg)


