நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 29 அக்டோபர், 2011

துனீசியா:217 இல் 90 இடங்களை கைப்பற்றியது அந்நஹ்ழா

2054507911துனீஸ் : அரபுலக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மொத்தம் 217 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் அந்நஹ்ழா 90 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குதல், அதிபரை நியமிப்பது, இடைக்கால அரசை உருவாக்குதல் ஆகியன தேர்ந்தெடுக்கப்பட்ட அவையின் அடுத்த பொறுப்புக்களாகும் என கமிஷனர் கமால் ஜெந்தூபி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பதிவான வாக்குகளில் 41.5 சதவீத வாக்குகள் அந்நஹ்ழாவுக்கு கிடைத்துள்ளது.13.8 சதவீத வாக்குகளை பெற்ற இடதுசாரி கட்சியான காங்கிரஸ் ஃபார் தி ரிபப்ளிக் 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள இத்திஹாத்துல் 21 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதேவேளையில், நான்காவது இடத்தை பிடித்துள்ள அரீதா ஷாபியா தாங்கள் வெற்றிப்பெற்ற தொகுதிகளை ரத்துச்செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். தொழிலதிபரான ஹாஷ்மி ஹமதி தலைமை வகிக்கும் கட்சிதான் இது.
வாக்களிக்க பணம் அளித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட சில தொகுதிகளின் முடிவை தேர்தல் கமிஷன் ரத்துச்செய்துள்ளது. அந்நஹ்ழாவின் தலைமையகத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் கண்ணீர்புகை வீசி விரட்டினர்.
இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.
துனீசியாவில் லட்சியத்தை அடையும் வரை புரட்சி தொடரும் என அந்நஹ்ழாவின் தலைவர் ராஷித்  கன்னூஷி தெரிவித்துள்ளார். துனீசியாவில் அனைவருக்கும் சம உரிமையை நடைமுறைப்படுத்துவோம்.துனீசியா அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என கன்னூஷி கூறினார்.