புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. குஜராத் மாநிலம் வளர்ச்சியில் மிகவும் முன்னேறியுள்ளதாக கூறும் நரேந்திரமோடியின் கூற்றில் உண்மையில்லை என உ.பி. முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நடத்திய உரையில் இருவரும் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர். மாநில அரசுகளை தரம் தாழ்த்தும் மத்திய அரசின் நடவடிக்கை ஜெயலலிதாவை கோபமடையச் செய்தது.அதேவேளையில் குஜராத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக போலியாக சித்தரித்து பிற மாநிலங்களை மட்டம் தட்டும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நடவடிக்கை மாயாவதியை கோபமடையச் செய்தது. மிகச்சிறந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்திப் பிடிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக மாயாவதி தெரிவித்தார்.