பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் மஹாராஷிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நந்தித் நகரில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நந்தித் நகரில் பொதுமக்களுக்கான நிகழ்ச்சியினை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது அம்மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மீதான ஆதரவை வெளிப்படுத்துவதாக இருந்தது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நந்தித் மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு புதிய இயக்கமாக இருந்ததினால் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடங்கப்பட்ட நோக்கத்தினையும் அதன் குறிக்கோளையும் விளக்கி கூறினார். அவர் மேலும் உரையாற்றும்பொழுது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வட இந்திய மாநிலங்களில் காலடி எடுத்து வைக்கும்போது அவற்றிற்கு எதிரான சதி திட்டங்கள், அடக்குமுறைகள் அவதூறுகள் என பல்வேறு வழிகளிலும் ஃபாஸிச சக்திகளுடன் கைகோர்த்து சில ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் வட இந்திய மாநிலங்களில் மிக வேகமாக வளர்ந்து வருவதால் ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இந்திய உளவுத்துறையில் இருக்கின்ற சில கருப்பு ஆடுகளின் உதவியோடு பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை ஊடகங்கள் மூலமாக பரப்பி வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக புதிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பெருமளவில் வரவேற்புகள் கிடைத்துக்கொண்டிருக்கிறது. "சமூக நீதி மாநாடு" என்பது வெறும் இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டம் அல்ல, மாறாக தேசிய அளவில் அனைத்து மக்களுக்கும் நீதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பிரச்சாரமாகும் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட " நேஷனல் செக்கூலர் ஃப்ரண்ட்"ன் தலைவர் சுரேஷ் கயிர்னர் பேசும் போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கம், ஊடகம் மற்றும் காவல்துறையின் போக்கு மிகவும் ஆபத்தானதாகும். இதனால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் இரட்டை நிலையை கடைபிடித்தால் முஸ்லிம் சமூகத்தின் நம்பகத்தன்மைய அரசாங்கம் இழக்க நேரிடும்", இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுச்செயலாளர் மெளலானா ரஃபீக் அஹமது ரஷாதி, ஜமாத்துல் உலமாவின் மாவட்ட தலைவர் முஃப்தி ஐயூப் காசிமி, இமாம்ஸ் கவுன்சிலின் மாவட்ட தலைவர் காஜி ரஃபீக், வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான், ஆகியோர் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில தலைவர் சாதிக் குரைஷி துவக்க உரை நிகழ்த்தினார். வரவேற்புரை மற்றும் நன்றியுரையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நந்தித் மாவட்ட தலைவர் அஜீஸ் சித்தீகி நிகழ்த்தினார். இருநூரு நபர்களுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில கலந்து கொண்டனர்