நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்:வாபஸ் பெறுவது குறித்து மத்திய அமைச்சரவையில் கருத்துவேறுபாடு

Army_Omar_Antony_295x200புதுடெல்லி : கஷ்மீரில் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை அம்மாநிலத்தின் சில மாவட்டங்களிலிருந்து வாபஸ் பெறுவதுக் குறித்து மத்திய அமைச்சரவையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் பேச்சுவார்த்தை மூலம் ஒத்தக்கருத்திற்கு வரவேண்டும் என சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
இதுக்குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த குர்ஷித் கூறியதாவது:சட்டத்தை வாபஸ் பெற தீர்மானம் எடுக்கும் முன்பு ராணுவத்திற்கு நம்பிக்கையளிக்கவேண்டும். ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச்சட்டம் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், போராளிகளை எதிர்கொள்வதில் ராணுவத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கூடாது. அந்தோணியும், சிதம்பரமும் ஒன்றாக அமர்ந்து இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கவேண்டும் என  குர்ஷித் கூறினார்.
கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெறுவோம் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார். நீண்ட இருபது ஆண்டுகளாக கஷ்மீரில் தொடரும் ராணுவத்தின் இருப்பை குறைக்கவேண்டும் என்பது தொடர்பாக அரசுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படும் என்பது இயல்பாகும் என மத்திய அரசு கருதுகிறது.
ஆனால் சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான உமர் அப்துல்லாஹ்வின் தீர்மானத்தை அரசு பரிசீலித்துவருகிறது என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார். அரசும், பாதுகாப்பு அமைச்சகமும் இவ்விவகாரத்தில் சமநிலையான அணுகுமுறையை கையாளும் அவர் மேலும் தெரிவித்தார்.