நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 26 அக்டோபர், 2011

பங்குச்சந்தை மோசடி:இந்திய வம்சாவழியை சார்ந்தவர் கைது

04rajat1வாஷிங்டன் : நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல பங்குச்சந்தை நிறுவனமான கோல்ட்மான் ஸாக்ஸின் முன்னாள் இயக்குநர் இந்திய வம்சாவழியைச்சார்ந்த ரஜத் குப்தா என்பவர் எஃப்.பி.ஐ முன்னால் சரணடைந்தர்.எஃப்.பி.ஐ அலுவலகத்தில் சரணடைந்த குப்தாவின் கைதை எஃப்.பி.ஐ பதிவுச்செய்தது.


அமெரிக்க பொருளாதாரத்துறையில் பிரமுகரான குப்தா சட்டவிரோத பங்கு நடவடிக்கை தொடர்பான ஊழலில் சிக்கினார்.குப்தாவின் நண்பரான இலங்கைவம்சாவழியைச்சார்ந்த ராஜரத்தினத்திற்கு ஃபெடரல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அதேவேளையில் குப்தா நிரபராதி என அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதும், உண்மைக்கு புறம்பானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.