தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு நகராட்சிகள், கணிசமாக பதிமூன்று பேரூராட்சிகள் என்று கைப் பற்றி இருந்த போதிலும் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் வாக்குவங்கி சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத
ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம், அதிமுக, திமுக, உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் முன்னேற்றம் காணப்படுகிறது. திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்னர் முதன்முறையாகத் தனித்துக் களம் கண்ட காங்கிரஸின் வாக்கு விகிதம் 5.71 ஆக உள்ளது.