ராய்ப்பூர் : முன்னர் திட்டமிட்டதுபோல் தனது பெங்களூர் பேரணி நடைபெறும் என பிரதமர் கனவில் ரதயாத்திரை நடத்திவரும் 84 வயதான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.ஜனசேதனா யாத்திரை தொடர்பாக பெங்களூரில் நடத்தவிருந்த பேரணி ரத்துச்செய்யப்படும் என ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.ஆனால் பெங்களூர் பேரணி ரத்துச்செய்தது குறித்து தனக்கு தெரியாது என எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் கர்நாடாக பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கைதுச்செய்யப்பட்ட சூழலில் அத்வானி இம்மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் நடத்தவிருந்த பேரணியை ரத்துச்ச்செய்ததாக கட்சி வட்டாரங்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தன.இதுத்தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அவர்.எடியூரப்பாவின் கைதுத்தொடர்பாக ஏற்கனவே கூறியதைவிட அதிகமாக ஒன்றும் கூறவியலாது என அத்வானி தெரிவித்தார்.