புதுடெல்லி : தனது குழுவினருக்கு எதிராக நடக்கும் பிரச்சாரத்தின் பின்னணியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்குபேர் குழு என ஹஸாரேவின் அறிக்கை துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் கூறியுள்ளது.
அரசு மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஹஸாரே உபயோகித்த வார்த்தைகள் இந்தியாவின் விழுமியங்களுக்கு பொருந்தாதது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷீத் ஆல்வி தெரிவித்துள்ளார்.ஹஸாரேவை நாங்கள் மதிக்கிறோம்.அவரிடமிருந்து இத்தகைய அறிக்கைகளை எதிர்பார்க்கவில்லை என ஆல்வி மேலும் தெரிவித்தார்.
ஊடகங்கள் வாயிலாக இத்தகைய வாக்குவாதங்களுக்கு தயாரில்லை.நேரடியாக கொள்கை பரிமாற்றம் செய்துக்கொள்ள வேறு வழிகள் உள்ளன என ஹஸாரேவின் குற்றச்சாட்டுக்குறித்து பதிலளிக்கவே மத்திய சட்ட அமைச்சர் ஸல்மான் குர்ஷித் தெரிவித்தார்.